செருப்பே அறிவாயோ உன் சிறப்பு

செருப்பே!
அறிவாயோ உன் சிறப்பு?...

செருப்பில்லா மனிதன் பலவீனமானவன்..
நண்பகல் வேளையில் தகிக்கும் சூரிய அடுப்பில் காய்ந்து இளகும் தார் சாலையில் நடக்க இயலாது செருப்பே நீயில்லாமல்...

கரடுமுரடான கற்களும், முற்களும் நிறைந்த பாதையில் இந்த மனிதனால் ஒரு போதும் நடந்து கடக்க இயலாது செருப்பே நீயில்லாமல்...

செருப்பே இன்னொரு சிறப்புண்டு அறிவாயோ?
அடுத்த பலமாக நிற்க நீ உதவுவது போல் செருப்பாய் உழைத்து தேய்கிறான் தொழிலாளி...
அதில் கம்பீரமாக உயர்ந்து நிற்கிறான் பண பெருச்சாளி...

செருப்பே! உன் மேல் படிந்த அழுக்கு, தூசியெல்லாம் பார்த்து ஏதேனும் கிருமி தொற்றியதாய் வீட்டிற்கு வெளியே விட்டுச் செல்வர் இந்த நன்றி கெட்ட மனிதர்கள்...
உன்னை சுத்தம் செய்ய முயற்சிப்பதே இல்லை...

உன்னைப் போலே உழைத்து உழைத்து உடல் மெலிந்து அழுக்கு படிகிறான் தொழிலாளி...
அவர்களை ஏழை நோயாளிகளென்று ஒதுக்கி வைக்கிறான் பண பெருச்சாளி...

நன்றி இவர்கள் செருப்பே! உன்னைக் கேவலமாக பேசுவோர் பலருண்டு...
அவர்களின் நிலையைப் பார்,
எவ்வளவு கீழாக இருக்கிறார்கள்??.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (26-Oct-17, 7:54 pm)
பார்வை : 2085

மேலே