​ தனிமையும் இனிமையே


தனிமை இருளின் வெளிச்சம்
தனிமை ஆழ்கடலின் அதிசியம்
தனிமை இன்னொரு ஆக்சிஜன்

என்னவர் சுற்றி இருந்தும்!
தாமரை இலையில் தவிக்கும் துளியாக நானிருக்க
அந்நொடியில் தனிமை எனக்கு நண்பனாய் தோள் கொடுத்து

கூட்டத்தில் ஒருவனாய் தினமும் நடிக்க
நான் நானாக வாழ வைத்தது இந்த தனிமை

தனிமையில் நடிக்க தேவையில்லை
நொடியத் தேவையில்லை
என்னை இழந்து இன்னொருவனாய் மாறத் தேவையில்லை

தனிமையில்
ரயில் பயணமாய்
துணையின்றி
தடைகள் இன்றி
கவலையின்றி செல்லலாம்

என் ரசனைக்கும், சிந்தனைக்கும்
தனிமை ஒரு நிலவு

தனிமையை அனுபவித்தவனுக்கு
கிடைக்கும் போதை
சொன்னால் புரியாது
உணர்ந்தால் மீள முடியாது

நான் கேட்கும் இடைவெளியை தந்து
தினம் காலையில் புதியவனாய் பிறக்க செய்து
என்னை ஓட வைக்கிறது இந்த தனிமை

மழை துளிகளாய் என்னோட பேச...
காட்டு குயிலின் ரீங்காரம் பாடி
தாயின் அரவணைப்பை தந்து
இரவின் மடியில் என் கண்ணீரை கரைத்து
மனதின் பாரமெல்லாம் காற்றில் கலக்க
என் உயிரை கடல் அலையாக நில்லாமல் பயணிக்க வைக்கிறது இந்த தனிமை

எழுதியவர் : கண்மணி (26-Oct-17, 8:29 pm)
பார்வை : 1243

மேலே