கனவும் கடவுளும்

கனவும் கடவுளும்

கண்கள் மூடி கனவுகாணும் காலம்
காற்றில் பறந்து போகும் என்று தெரிந்திருந்தால்
கடவுளிடம் வரம் ஒன்றை பெற்றிருப்பேன்
என்னை குழந்தையாகவே வைத்திருக்க...

கண்கள் திறந்து கனவு காணுவதுதான்
இவ்வுலக நீதியென்றால்
கடவுளை வேண்டியிருப்பேன்
இவ்வுலகை படைக்காதே என்று....

காணும் கனவெல்லாம் பலிக்கும் என்றால்
பலமுறை கண்மூடி கண் திறக்க வேண்டுமென
கடவுளை வேண்டியிருப்பேன்
இவ்வுயிரை பறித்து விடாதே என்று....

கனவும் காட்சிகளும் வேறாவதால்
கடவுளை வேண்டிக்கொண்டேன்
எதையும் தாங்கும் இதயத்தை கொடுவென்று.....

எழுதியவர் : கே என் ராம் (29-Oct-17, 7:02 am)
Tanglish : kanavum katavulum
பார்வை : 73

மேலே