ஒரே உயிர் தான்
உன்னை காத்திருக்க வைக்க மனமில்லை
என்னை கொடுத்து விடவும் முடியவில்லை
உன்னை ஒட்டியிருக்கவும் முடியவில்லை
உன்னைவிட்டு தள்ளியிருக்கவும் முடியவில்லை
உனக்குள் நாமென ஒருஉயிராகவும் முடியவில்லை
எனக்குள் நானாகவும் இருந்திட முடியவில்லை
உன்னை கனவுக்குள் விலக்க முடியவில்லை
உன்னை நினைவுக்குள் நீக்க முடியவில்லை
உன்னை எனக்குள் ஒளித்து வைத்தேன்
உன்னை எனக்குள் புதைத்துக் கொண்டேன்
உன்னை எனதாக்கினேன் உன்னை எடுத்து
என்னை உனதாக்கினேன் என்னைக் கொடுத்து
உனக்கும் எனக்கும் இடைவெளிகள் ஆயிரம்
உனக்கும் எனக்கும் உள்ளத்தில் இல்லையே தூரம்
உனக்கும் எனக்கும் ஈருயிரா ஓருயிரா
உள்ளுக்குள் குழம்புகிறேன்
இரு உயிர் தான்
அனால்
ஒரு உயிர் தான்
என் கனவுகளில் நீ இருக்கிறாய்
என் நினைவுகளில் நீ இருக்கிறாய்
என் நாட்களில் என்னோடு வாழ்கிறாய்
என் மணிகளில் என்னோடு கதகதக்கிறாய்
என் நிமிடங்கில் என்னோடு நிற்கிறாய்
என் நொடிகளில் என்னிடம் கண் சிமிட்டுகிறாய்
என் பொழுதுகளில் என் நெஞ்சுக்குள் வாழ்கிறாய்
என் கணங்களில் என் கண்களுக்குள் வருகிறாய்
என்னோடு நீ நடக்கிறாய்
எனக்குள் நீ இருக்கிறாய்
பின்னெப்படி ஈருயிர்
ஓருயிர் தான்
உனக்கும் எனக்கும் ஈருயிரா ஓருயிரா
உள்ளுக்குள் உன்னை சுமக்கின்றேனே பின்னெப்படி
ஒரு உயிர் தான்
உனக்கும் எனக்கும் ஈருயிரா ஓருயிரா
உனக்குள் நானிருக்கிறேனே பின்னெப்படி
ஒரு உயிர் தான்