மனிதம்

முகவுரை
எந்த நாட்டிலும் அந்த நாட்டின் பூர்வ குடிமக்கள் புறக்கணிக்கப் படுகிறார்கள். ஒரு காலத்தில் . பல நாடுகளில் காலனித்துவ ஆக்கிரமிப்பால் பூமி புத்திரர்கள் காணி, வீடு ,வாசல் இழந்து காலாச்சாரம் ,மொழி அழிந்து நாட்டில் புறக்கணிக்கப் பட்டவர்களாகிறார்கள் . காலனித்துவ ஆட்சியில் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி என்ற சுரண்டல் பேரில் பூமிபுத்திர்களின் காணிகள் பறிக்கப்பட்டு பிற நாட்டவர்களை கொண்டு வந்து குடியேற்றினார்கள் . இது வட, தென் அமெரிக்கா பல ஆபிரிக்க தென் ஆசிய நாடுகளில் நடைபெற்றது
*****
அன்று 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஒரு சனிக்கிழமை ஒன்டாரியோ கனடாவில் அனேகமாக நிகழ்ச்சிகள் எல்லாம் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை வசதிக்காக நடைபெறும். அந்த மாதம் என்றுமில்லாத வாறு குளிர். வழக்கத்தில் ஸ்னோ பெய்து ஒரு மணி நேரத்துக்குள் ஸ்னோ தள்ளும் வாகனம் வந்து பாதையில் உள்ள ஸ்னோவை தள்ளிச் சென்ற, பின் அதைத் தொடர்ந்து நீல நிற விளக்கு மின்ன உப்பை வீதியில் ஒரு வாகனம் தூவிச் செல்லும் . இது பனிக் கட்டிகள் விரைவில் உருக உதவும்.
ஸ்னோ பெய்து முடிந்து ஒரு மணிநேரத்திற்குப் பின் ஒரு தமிழ் சங்கத்தில் நடக்க இருக்கும் ஓன்று கூடலில் பிரதம அதிதியாகப் பங்கு கொள்ள என் பேரன் விஸ்வாவோடு காரை ஓட்டி சென்றேன். . அப்போது நேரம் மாலை ஐந்து மணி இருக்கும் எனக்கு முன்னால் வீதியில் உப்பு பரப்பிய படி ஒரு ட்ரக் செல்வதைக் கண்டேன். அதன் பின்னல் மெதுவாக என்காரை ஓட்டினேன் . அத்தக் காலநிலையில் . நான் காரை ஓட்ட விரும்பவில்லை என்பதால், அந்த நிகழ்ச்சிக்கான பயணத்தை ரத்து செய்ய முயன்றேன். நான் பிரதம அதிதியாகையால் என்னால் முடியவில்லை . வீதி மிகவும் வழுக்கும் நிலையில் இருந்தது. மூன்று வருடங்களுக்கு முன் பெரும் பாதையில் எனது கார் வழுக்கி கவிழ்ந்த அனுபவம் இன்னும் என் நினவில் இருந்தது. அன்றும் இன்று போல் ஸ்னோ கொட்டி இருந்தது. வீதியில் இரு கார்கள் சறுக்கியாதல் வீதி ஓரத்தில் சரிந்து கிடந்தன அக் கார்களை வீதிக்கு கொண்டு வர கார் உரிமையாளர்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லாததால், தங்கள் கார்களை அப்படியே விட்டுச் சென்றார்கள். இரண்டுமே விலை உயர்ந்த கார்கள். வீதி ஓரத்தில் இருந்த மரங்கள் மற்றும் வீட்டின் கூரைகள் ஸ்னோவால் மூடப்பட்டிந்தன . ஒரு சில வாகனங்கள் மட்டுமே வீதியில் காணப்பட்டன. ஜன நடம்மாடம் இல்லை

பஸ் ஸ்டாப்பில் பயணிகள் பஸ் வரும் வரை தங்குவற்றுக்கு உள்ள இடம் மூன்று பக்கங்களிலும் ஃபைபர் கண்ணாடி கொண்டது. அதற்குள் ஒரு உருவம் போர்த்து மூடிக்கொண்டு படுத்திருப்பதை என் பேரன் கண்டான் . எனது காரில் வெப்ப நிலை -15 டிகிரி சென்டிகிரேட்டை காட்டியது. அந்த காலநிலையில் எவரும் உடலைப் பாதுகாக்காமல் வீதி ஓரத்தில் படுத்தால் உறைந்து போவர்கள். அதை உடல் வெப் நிலை குறைவு (Hypothermia) என்பர். இது தீவிரமான குளிரினால் ஏற்படும். உடலின் வெப்ப உற்பத்தியைக் குறைக்கும் அல்லது வெப்ப இழப்பை அதிகரிக்கும் போன்ற நிலை ஏற்படலாம்.
“தாத்தா அங்கே பாருங்கள் அந்த மனிதனை . அவன் இந்த குளிரில் Hypothermia என்ற உடல் வெப்ப குறைவினால் பாதிக்கபட்டு விரைவில் உயர் இழக்கப் போகிறான். அவனைப் பார்க்க பரிதாபமாக இருகிறது இவனை இப்படியே விட்டுச் செல்வது சரியில்லை தாத்தா” என்றான் என் பேரன். அவன் இரக்க சுபாவம் உள்ளவன் ,
“ நீ சொல்வது உண்மை தான் விஷ்வா “ என்றேன் நான்
"பாருங்கள், தாத்தா. அந்த மனிதன் இந்த உறைபனி குளிரில் எப்படி தூங்குகிறான் என்று எனக்குப் புரியவில்லை. இவன் இந்த நாட்டுபூர்வ குடிமகன் போல் எனக்குத் தெரிகிறது. பாவம் இவனுக்கு இந்த நிலையா?. அவனுக்கு நாங்கள் உடனே உதவ வேண்டும் . சாலை ஓரத்தில் காரை உடனே நிறுத்துங்கோ தாத்தா ” என்றான் விஸ்வா .
என் பேரனுக்கு கனேடிய பூர்வகுடி மக்கள் மீது தனி மரியாதையையும் மதிப்பும். அவர்களைப் பற்றி அவன் அதிகம் அறிந்து வைத்திருந்தான். ஒரு சமயம் அவன் சாரணர் இயக்கத்தின் தலைவனாக இருந்தபோது சில சாரணர்களோடு கனடா தேசத்து பூர்வகுடி மக்கள் வாழ்ந்த ஒன்றாறியோவில் உள்ள மனிட்டூலின் தீவுக்கு சென்று சமூகச்சேவை செய்திருக்கிறான். அதையிட்டு நான் பெருமைப் பட்டேன்.
நான் அவன் சொன்னதுக்கு உடன்பட்டு காரை ஓரமாக நிறுத்தினேன் என் காரின் அவசர விளக்குகள் மின்னத் தொடங்கின, காரை விட்டு இறங்கி நாங்கள் இருவரும் அந்த மனிதனை நோக்கி நடந்துசென்றோம் .
விஸ்வா அந்த மனிதனின் முதுகில் தட்டி எழுப்பப் பார்த்தான். அவன் அசையவில்லை. ஒருவேளை இறந்து விட்டானோ என நான் நினைத்தேன். விஸ்வா அந்த மனிதனின் முதுகில் திரும்பவும் தட்டி ஆங்கிலத்தில் “ ஹாய்! நீ கெதியிலை எழும்பு நீ இப்படி குளிரில் படுத்தால் செத்துப்போவாய்” என்றான் விஸ்வா.
விஸ்வாவின் உரத்த குரல் கேட்டு அந்த மனிதன் மேதுவாக தன் முகத்தில் மூடியிருந்த போர்வையை நீக்கி எங்களைப் பார்த்தான்
“ஹலோ உனக்குப் படுக்க வேறு இடமில்லையா?. ஏன் இங்கை இந்த குளிரில் படுத்திருக்கிறாய். போலீஸ் கண்டால் உன்னை ஸ்டேசனுக்கு கூட்டிப் போய் விடும் . நீ வா எங்களோடு. உன்னை வீடு இல்லாதவர்கள் இருக்கும் இடத்துக்கு கூட்டிச் செல்கிறோம். நீ இப்படி இருந்தால் செத்துப் போவாய்.” என்றேன் நான்.
அவன் பதில் சொல்லவில்லை. அவன் மெதுவாக நடுங்கிய படி எழும்பினான். நாங்கள் இருவரும் அவன் கைகளைப் பிடித்து என் காருக்கு அழைத்துச் சென்றோம். அவன் நடக்கக் கஷ்டப் பட்டான். அவன் உடல் குளிரில் நடுங்கியது அவனுக்கு எழுபது வயது இருக்கும். தாடி வளர்ந்து இருந்தது. அவன் உடலில் ஒரு கிழிந்த கம்பளித் துணி அது அவனை குளிரில் இருந்து பாதுகாத்தது. கையுக்கு குளிர் தாங்க கைஉரை இல்லை. காலில் ஒரு கிழிந்த சப்பாத்து. தலையில் ஒரு பழைய கம்பளித் தொப்பி. எந்த புண்ணியவான் கொடுத்ததோ தெரியாது ஹிப்பியை போல் நீண்ட முடி. அவனிடம் இருந்து சிகரெட் வாசசனை வீசியது..
வாகனத்தில் போன யாரும் நிறுத்தி அந்த மனிதனுக்கு உதவ முன் வரவில்லை . எல்லோருக்கும் ஏதோ அவசரம்.
போகும் வழியில் நாங்கள் எங்கள் காரை நிறுத்தி டிம் ஹார்டன்ஸ் உணவகத்தில் பேகேல் மற்றும் காப்பி வாங்கிகொண்டு . மனிதனை வீடற்றவர்கள் இருக்கும் லோட்ஜூக்கு கூட்டிச் சென்றோம்
நான் லோட்ஜூக்கு மேற்பார்வையாளரைச் சந்தித்து அந்த மனிதனின் நிலைமையை விபரமாகச் சொன்னேன். அவர் அந்த மனிதனின் நிலை அறிந்து லோட்ஜூயில் சேர்க்க சம்மதித்தார் ஒரு உயிரை காப்பாற்றியதுக்கு எங்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
நான் கொடுத்த காப்பியை குடித்து , பேகலை உண்ட பின் அவர் முகத்தில் ஒரு சிரிப்பு வந்தது., படுக்கையில் இருந்தபடி அவர் பேசத் தொடங்கினார் .
“ தங்கியூ சேர் “ என்றான் அந்த மனிதன்
“நீ யார். உன் பெயர் என்ன”? என்று கேட்டேன்.
அவன் திரும்பவும் சிரித்தபடி “என் பெயர் ஓஜிமா” என்றான்
“ அதன் அர்த்தம் என்ன “? விஸ்வா கேட்டான்
“ மன்னன் என்பது அர்த்தம் ”அவன் பதில் சொன்னான்
:” யாருக்கு மன்னன் “? விஸ்வா சிரித்தபடி அவனைக் கேட்டான்
“ கிரெடிட் ரிவர் பகுதிக்கு “
“ மிசிசாகாவில் உள்ள கிரெடிட் ரிவரா”?
“ ம் ம்
“ அப்ப நீ மிசிசாக பழங்குடியினத்தவனா”.? நான் கேட்டேன்
“ ம் ம்.. “என்று அவனிடம் இருந்து வாய் பேசாமல் பதில் வந்தது
நான் விஸ்வாவை பார்த்தேன்.
“ இருக்கலாம் தாத்தா , அவான் தோற்றம் மிசிசாகாவின் பழங்குடியினத்தவன் போல் இருக்குது. இந்த இனதுக்குகேன்ற பாரம்பரியம் இருகிறது எங்கள் ஈழத் தமிழர்களின் பாரம்பரியத்தை போல் “
“ நீங்கள் இருவரும் இலங்கை தமிழர்களா” ?. ஓஜிமா எங்களைக் கேட்டான்
“ஏன் கேட்கிறாய். ஓஜிமா” ?நான் அவனிடம் கேட்டேன்
“ எனக்கு உங்கள் இனத்தின் வரலாறு ஓரளவுக்கு தெரியும்”
“எப்படித் தெரியும். நீ பல ஆயிரம் மையல்ளுக்கு இப்பால் இருக்கிறாயே”?
“ என்னோடு செக்யூரிட்டி கார்ட்டாக வேலை செய்த பாலன் என்பவன் சொன்னான்}
“ யார் பாலன்”?
“ அவன் உங்கள் இனத்தின் உரிமைக்காக போராடிய ஒரு போராளி. போர் முடிந்தும் ஊயிர் தப்பி கனடா வந்தவன் . நல்லவன். உண்மையே பேசுவான். அவன் ஈழத் தமிழர் வரலறு பற்றியும் போரைப் பற்றியும் உங்கள் தலைவர் பற்றியும் கதை கதையாய் சொல்லுவான் உங்கள் இனத்தின் உரிமைகளையும் பாரம்பரித்தையும் பாதுக்காக்க பல ஆண்டுகளாக போராடி வருகிறது உங்கள் இனம். எங்கள் மிசிசாகா இனத்தை போன்றது.”
“ கேட்க ஆச்சரியமாக இருக்கிறது. ஓஜிமா. சரி சுருக்கமாக உன் மிசிசாகா பழங் குடி இனத்தைப் பற்றி சொல்லு கேட்பம்.”நிகஹிகு
“என் கேட்குறீர்கள் சேர்”?
“காரணம் இல்லாமல் கேட்பேனா?. நான் ஒரு இரு மொழி எழுத்தாளன். உனது கதை யைக் கேட்டு எமது கதையோடு ஒபிப்பிட்டு ஒரு புதுமையான நாவல் ஒன்றை உருவாக்க நினைகிறேன்”
“ அப்படியா?. அது நல்லது என்ற படியால் சொல்லுகிறேன் கேளுங்கள்”
விஷ்வா என்னைப் பார்த்து ”: தாத்தா : நீங்கள் போக இருந்த நிகழ்ச்சிக்கு உங்களால் வர முடியாது என்று போன் செய்து சொல்லுங்கோ;. ஓஜிமாவின் சந்திப்பு உங்களுக்கு முக்கியம்” என்றான்:
“நீ சொலவது சரி விஸ்வா. என்று என் கைத் தொலை பேசியை எடுத்து சங்கத் தலைவருக்கு போன் செய்து காலநிலை சரியாக இல்லாத படியால் என்னால் நிகழ்ச்சிக்கு வர முடியாது என்று சொல்லி விட்டு ஓஜிமாவின் இனத்தின் வரலாற்றைக் கேட்க அவன் பக்கத்தில் கட்டிலில் அமர்ந்தேன் ஓஜிமாவும் தன் மிச்சிசசா இனத்தை பற்றி சொல்லத் தொடங்கினான்;என் பேரன் தன் ஐபோனில்
குறிப்பு எடுக்கத் தயாரானான்..
“சார் எனக்கு என் தந்தையும் பாட்டனாரும் சொன்தைத் தான் சொல்லுறன்’ , எனது பாட்டனார் என் இனத்தின் தலைவராக இருந்தவர். நூறு வயது மட்டும் வாழ்ந்தவர். ஒரு காலத்;தில் எங்கள் இனமக்களின் நீண்ட ஆயுளுக்கு . காரணம் அவர்கள் ;இயற்கையில் கிடைத்த உணவை உண்டார்கள். இயற்கையை தெய்வமாக கருதினார்கள். மரங்களை பெரிதாக மதித்தார்கள் . பலர்; உங்கள் போராளிகள் போல் வீரர்கள். அவர்களின் முக்கிய நடனம் பௌ வொவ் (Pow Wow). நடனம், இதில் lபாடுவது, பார்வையிடுவது , பழைய நட்புகளை புதுப்பித்தல், புதியவற்றை உருவாக்குதல் ஆகியவற்றுடன் ஒன்றிணைந்து பூர்வீக அமெரிக்க மக்களை சந்திப்பது,அமெரிக்க கலாச்சாரத்தை புதுப்பித்து அமெரிக்க இந்தியர்களின் கலாச்சாரத்தை காப்பாற்றுவதற்கான ஒரு முறையாக இது உள்ளது. “
“கேட்க சுவார்சியமாக இருகிறது. மேலே சொல்லு ஓஜிமா”
“கனடா பூர்வ குடிமக்களை மூன்று கால கட்டங்களில் பிரிக்கலாம் அவை கி.மு 9000-8500 பாலியோ-இந்திய காலம். , கி.மு 8000-1000 ஆர்ச்சிக் காலம் அடுத்தது 1000கி பி .-1650 வரைவுட்லேண்ட் காலம். கிரெடிட் ரிவர் மற்றும் குக்ஸ்வில்லே க்ரீக் வடிகால் பகுதிகளில் அடங்கும் இன்றைய பகுதி மிசிசா நகர் ஐராவாகிய பிரதேசத்தின் நடுவில் அமைந்துள்ளது. காலப்போக்கில், பழங்குடி மக்களிடையே வேறு மொழிகளிலும் மொழிக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. மிசிசாகுவாவைச் சுற்றி இருந்த குடியேற்றங்களை உள்ளடக்கிய இரோகுயியன் மற்றும் அல்கோங்கோன் ஆகியவை மிகப்பெரியதாக இருந்தன. எனினும், பின்னர் எழுத்து வடிவ மொழி உங்கள் மொழி போல் எந்த மொழியிலும் இல்லை.”
“ நீ சொல்வது உன்மை தமிழ் மொழி உலகதின் மிகப் பழைய மொழியாகும். அதனால் கனேடிய அரசு ஜனவரியை தமிழ் பாரம்பரிய மாதம் என் பிரகணப் படுத்தி உள்ளது”. மேலே சொல்லு”
“ ஒன்ராறியோவின் ஏரிக் கடற்கரையோரமாக மக்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள், இப்போது மிசிசாகா நகர் பகுதிகளில் 10,000 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 1650 மற்றும் 1720 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இரோகுயியன்(Iroquoian )பேசும் மக்களுக்கும் மிசிஸ்வாஸ்காஸ், ஓஜிபவா பழங்குடியினருக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டது, அவர்கள் இப்போது தெற்கு மிசிசாகா நகரில் உள்ள கிரெடிட் ஆற்றோடு ( Credit River) சேர்த்து, தெற்கு ஒன்ராறியோவின் பெரும் பகுதிகளில் தங்களை நிலைநாட்ட வந்தனர்.
அமெரிக்கப் புரட்சியின் போது, வரவிருக்கும் பிரிட்டிஷ் விசுவாசிகளுக்கு பிரிட்டிஷ் அரசு பெரும் பரப்பளவு நிலம் வாங்கத் தொடங்கியது. பிரிட்டிஷ் கிரீன் மற்றும் மிசிசாகா பழம்குடி மக்கள் வாழ்ந்த பகுதிகளில் முதல் நிலம் வாங்குதல் 1781 ஆம் ஆண்டில் இருந்தது. 1800 ஆம் ஆண்டளவில், நடந்தது மிசிசாகா நிலப்பகுதியில் எஞ்சியிருந்த அனைத்தும் "மிசிஸாகுகா டிராக்ட்" ஆகும். இது எட்டோபிகோ க்ரீக்லிருந்து பர்லிங்டன் வரை.
“ எங்கள் ஈழத்தில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் சுதந்திரத்துக்குப் பின் திட்டமிட்ட சிங்கள் அரசின் குடியேற்றத்தைப் போல் இருக்கிறது. சரி மேலே மேலே சொல்லு” என்றேன் நான்
“1805 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் மிசிசாகுவாவின் கடைசிப் பகுதிக்கு பிரிட்டிஷ் பேச்சுவார்த்தைகள் தொடங்கின., 1805 இல், மிசிசாககா மற்றும் பிரிட்டிஷ் கிரீன் என்ற ஒப்பந்தம் கையெழுத்திட்ப் பட்டது. இதை , பொதுவாக முதல் கொள்முதல் என்று குறிப்பிடப்படுகிறது. பிரிட்டிஷ் எட்டோபாகோக் க்ரீக் மேற்குவிலிருந்து ஒரு பகுதி, பிரிட்டிஷ் எர்லிங்டன் அவென்யூவின் நவீன ஆறு மைல்களுக்கு பர்லிங்டன் விரிகுடாவிற்குக் கிடைத்தது. இது டொரொன்டோவின் டவுன்ஷிப் இப்போத்ய மிசிசாகா நகரம் ஆனது.
கிரெடிவ் ரிவரின் இரு பக்கங்களிலும் ஒரு மைல் வைத்து, பன்னிரண்டு மற்றும் பதினாறு மைல் இருபுறங்களிலும் எம் இனம் உட்பகுதியைத் தக்கவைத்துக் கொண்டது, தங்களின் பாரம்பரிய வழிவகைகள் பாதுகாப்பதற்காக அவர்களைத் தூண்டியது.
1818 ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் கிரீன் மற்றும் மிசிசாகா முதல் நாடு 19 ( First Nation 19) என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தில், பிரிட்டீஷ் " எமது மிசிசாகா டிராக்டின்" எஞ்சிய பகுதியைக் கைப்பற்றியது, , இதில் ஸ்ட்ரெட்ஸ்வில்லே, மால்டன் மெடோவெல் கிராமங்கள் அடங்கும். கிரியேட்டிவ் ஆற்றின் மீது, மற்றும் பதினாறு மற்றும் பன்னிரண்டு மைல் க்ரீக் நிலப்பகுதிகளில் எமது இனம் போராடினார், ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், அந்த நிலங்களுக்கான அரசாங்க பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன. இப்பகுதியில் அண்மையில் குடியேறியவர்கள் ஆலைகளை அமைப்பதற்காக கரையோரங்களையும் ஆறுகளையும் அணுகினர். பெப்ரவரி, 1820 இல், பல ஒப்பந்தங்கள் கையெழுத்திடப் பட்ட்ன . கிரெடிட் ஆற்றின் கிழக்குப் பகுதியில் மிசிசாக இனம் இருநூறு ஏக்கர் மட்டுமே வைத்திருந்தது. பின்னர் 'இருநூறு ஏக்கரையும் ' சரணடைந்து, 1980 எமது இனம் பன்னிரண்டு அல்லது பதிமூன்று மில்லியன் டாலர்களை பெற்றது.
1820 களின் முற்பகுதியில், அரசாங்கம். எமது இனம் விரைவில் அழிந்து போவதாக நம்பினர். 1825 ஆம் ஆண்டில், பீட்டர் ஜோன்ஸ் கிரெடிட் ஆற்றிற்கு வந்தபோது. அந்த ஆண்டின் பிற்பகுதியில், கிரெடிட் ஆற்றிற்கு அருகே ஒரு கிராமத்தை உருவாக்க மிசிசாக அரசாங்கம் ஒப்புக்கொண்டது.. 1840 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், மிசிசாகா கிரெடிட் நதிப் பகுதியை விட்டு வெளியேற முடிவு செய்தார்கள். 1847 இல், கிரெடிட் ஆற்றின் மிசிசாகா ஆறு நேஷன் ரிசர்விற்கான ( Six Nation Reserve) இடத்திற்குச் சென்று, ஹேர்ஸ்ப்ஸ்வில்லில் பழங்குடி மக்;களுக்கென புதிய கிரெடிட் ரிசர்வ் ஒன்றை நிறுவினார்.
இன்று சுருங்கிய புதிய முதல் நேசன் (First Nation), கிரெடி ஆற்றின் குறுக்கே தங்கள் மூதாதையருடன் வலுவான உறவுகளை கொண்ட ஒரு துடிப்பான மற்றும் மறுபிறவி கலாச்சாரத்தை கொண்டாடுகிறது.” என்று சொல்லி ஓஜிமா தன் கதையை முடித்தான். எங்கள் . முதல் நேசன் பகுதி மக்களுக்கு குடியையும் சூதாட்டத்தை பழக்கியது அரசு. அதற்கு நான் அடிமையானேன்.நான் படிக்கவில்லை “
“ அது சரி ஓஜிமா மிசிசாகா என்பதன் அர்த்தம் என்ன “? விஷ்வா கேட்’டான்
" மிசிசாகா என்ற பெயரின் அர்த்தம் "பெரிய நதி ஓரத்தில் வாழ்பவர்கள் என்பதாகும் ." என்றான் ஓஜிமா
“ஓஜிமா உனக்குத் தெரியுமா கனடாவில் உள்ள நகரங்களில் மிசிசாசா நகரம் ஆறாவது பெரிய நகரம் என்று”
”கேட்க சந்தோசமாக இருக்குது சார் ஆனால் எமது இனத்தின் சுதந்திரம் பறிபோய் விட்டதே....” என்று வார்த்தைகளை ஓஜிமா இழுத்தான். வவன் கண்களில் நீர்வந்தது”
“ உன் கதையை எனக்குச் சொன்னதுக்கு நன்றி ஓஜிமா. இதை என் அன்பளிப்பாக வைத்துக் கொள் என்று 100 டொலர் நோட் ஒன்றை அவன் கையில் திணித்து விட்டு என் பேரனுடன் வீட்டுக்குக் கிளம்பினேன்.

*******
( உண்மையும் கற்பனையும் கலந்தது)

எழுதியவர் : பொன் குலேந்திரன் - கனடா (27-Oct-17, 5:17 pm)
Tanglish : manitham
பார்வை : 212

மேலே