குழந்தை டாக்டர்

குழந்தைகளுக்கு வைத்தியம் பண்ணும் ஒரு மருத்துவ மனைக்கு முதல் தடவையா போனார்
ராமசாமி..

அந்த மருத்துவ மனைக்கு பல வருஷங்களாக போய் வந்து கொண்டு இருந்தார் கந்தசாமி..

இருவரும் நண்பர்களாகி டாக்டர் வரும் வரை பேசி கொண்டு இருந்தார்கள்.

ராமசாமிக்கு தன முதல் குழந்தைக்கு வைத்தியம் பார்க்க வந்து இருந்ததால் அவருக்கு அந்த
குழந்தை டாக்டரை பத்தி மேலும் விசாரிக்க ஆசை பட்டார்.

" சார், நீஙக தப்பா எடுத்துக்காதீங்க. நான் இந்த டாக்டரை பத்தி உங்க கிட்டே கொஞ்சம்
கேக்கலாமாம்ங்க" என்று மெல்ல கேட்டார்.

உடனே கத்தசாமி " நான் இந்த டாக்டர் கிட்டே இருபது வருஷமா வந்து கிட்டு இருக்கேன்.
" நீங்க உங்க முதல் குழந்தைக்கு வைத்தியம் பாக்க முதல் தடவை வந்து இருக்கீங்கன்னு நான்
நினைக்கிறேன்.இந்த குழந்தை டாகடர் ரொம்ப ரொம்ப நல்லவங்க.அவர் பேரு டாகடர் படிப்பு
படிக்கிறதுக்கு முன்னாடி அவர் பேரு பழனிசாமின்னு இருந்திச்சு. ஆனா அவர் குழந்தை வைத்தியம்
படிச்சு அவர் ஒரு குழந்தை டாக்டர் ஆனவுடன் அவர் தன பேரை ""குழந்தை சாமின்னு"" மாத்தி கிட்டார்"
என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது அந்த குழந்தை டாக்டர் குழந்தைசாமி ஒரு அரை கை
சட்டையுடனும் ஒரு அரை டிராயருடனும் தன் ரூமை விட்டு வெளியே ஒரு குழந்தை போல தவழ்ந்து
வந்து அடுத்த குழந்தைக்கு வைத்தியம் பார்க்க அழைச்சு கிட்டு .போனார்.

" இப்ப உங்க சந்தேகம் தீர்த்துச்சாங்க" என்று கேட்டார் கந்தசாமி.

மிகவும் நிம்மதியுடன் இருந்து வந்தார் ராமசாமி.அவர் முறை வந்ததும் அவர் குழந்தைக்கு
வைத்தியம் பண்ணிக்க கொண்டு போனார்.

எழுதியவர் : ஜெ சங்கரன் (27-Oct-17, 12:17 pm)
சேர்த்தது : Sankaran
Tanglish : kuzhanthai doctor
பார்வை : 211

மேலே