டெங்கு மரணம்
கொசுக்கள் கடிக்குதடா மக்கள்
கொத்து கொத்தாய் சாவுதடா
ஏடீஸ் கொசுக்களடா இதுக
ஏகே47ய் மாறுதடா
சாக்கடையில் வளர்ந்தயெல்லாம்
சத்தமில்லாம கடித்ததடா ஆனா
நல்ல தண்ணியில் வளர்ந்த இதுக
நாக பாம்பாய் கொத்துதடா
ஏழ பணக்காரன் பேதம் பாராம
இதுகள எதிர்க்க முடியாம
எங்க சனம் சாவுதடா
சுற்றுபுற தூய்மை ஒன்றே
நம் சொந்தங்கள காக்குமுங்க
நிலவேம்பு கசாயம் குடிங்க
நிம்மதியாய் வாழ்ந்திடுங்க