கோர்வை

நீ கொய்யாக்கனி தான்...
நான் கொய்யும்கனி தான்...

உந்தன் மனம் இரும்பு தான்...
நான் உந்தன் காந்தம் தான்...
எதற்கும் கரையாத கல் நெஞ்சக்காரன் தான்...
எனக்கொன்று என்றாலே பதறிடும் வீரன் தான்...

நான் கொய்யாக்கனி தான்...
நீ மட்டும் கொய்யும்கனி தான்...

எந்தன் மனம் இரும்பு தான்...
உன்னை மட்டும் அடையும் எந்நாளும் தான்...
உந்தன் மடியே போதும்
நான் வாழத்தான்...

புயலை கூட தாங்கிடுவேன்...
பூவே உந்தன் கண்ணில் சிறு தூசி விழுந்தாலும் துடித்திடுவேன்...

சுவாசங்கள் இடம் மாறுது...
ஆர்மோன்கள் பரிமாறுது...

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (29-Oct-17, 8:09 am)
Tanglish : korvai
பார்வை : 92

மேலே