ஓர் காதல் பயணம்

கனவொன்று நெனவொற்றும்
இது கனவா நனவா
என்றே வினாவினேன்

கான காத்திருந்த பல திங்களும் உன் கண் கண்ட மறுநொடியே கரைந்ததடி என்னவளே

செதுக்கிய சிலையென
அவள் முகமிருக்க அதற்கு
கூடுதல் மெருகேற்றியது
அச்சிறு பொட்டு

இமைத்தும் இமையா
விழியிரண்டு என்னை சிறைபிடிக்க
அக்கனமே சரணடைந்தேன்...

நான் என்னிலை மறந்து
அவள்முகம் பார்த்திருக்க

ரோசா இதழொன்று
இனியென்று அழைக்கவே சுயநினைவடைந்தேன்

என்ன ஆச்சு என்றால்

என்னுயிர் உன்னுள் கலந்து
ஒரு நிமிடம் அயிற்றென்றேன்

சீ போடா என
சிறு புன்னகை

அளவான சிரிப்பு
அம்புட்டு அழகு

காதலை பேச வார்த்தைகள்
பலயிருந்தும் தொடங்க
ஏனோ தயக்கம் அங்கே

இருவுள்ளமும் தவிக்க
மௌணம் பல பேச
கண்கள் பரிமாறியது மனதை

நாழி கடக்கவே சிற்றுண்டி
சென்றோம் - தேனிலவோ எனதருகில் அமர்ந்து
தேனமிர்தம் பருக
என்மனதை அவளறிய
எனதாசையை நிறைவேற்றினால்
ஓர் தற்படயில்..

இப்படியே இருந்திட மனம் துடித்தாலும் சூழல் விடுமா

படைத்தவனிடம் வேண்டினேன்
இத்தருணம் இது நீள வேண்டும் தொடு வானம் போலவேயென்று

சாலையை கடக்க
அவள் தயங்க - நானறிய
அவள் பார்வையிலே
உணர்த்தினாள்

அவள்கரம் பிடித்து
சாலையை கடந்தேன்
பிடித்தகரம் விடாதிருக்க
இச்சாலை நீளாதோ என இருவுள்ளமும் தவித்ததை
யார் அறியோர்...

எழுதியவர் : சே.இனியன் (29-Oct-17, 2:45 pm)
Tanglish : or kaadhal payanam
பார்வை : 306

மேலே