காதலின் தனிமை பொழுது

என்னை அவளிடமும்
அவளை என்னிடமும்
இருவரும்
தேடிக்கொண்டிருக்க..

இருவருக்கும் தெரியாமல்
இருவரிடமும் சொல்லாமல்..
விண்ணிற்கும் மண்ணிற்குமான
இடைவெளியில்..
கை கோர்த்து
வட்டமிட்டு
ஆனந்தமாய் அசைந்து
ஆடிப் பாடிக்கொண்டிருக்கிறது
இருவரின் காதல்.

அமைதியாய்
அதை
வேடிக்கை பார்த்துக்கொண்டே
கழிகிறது
காதலின் தனிமை பொழுது..

எழுதியவர் : மகேந்திரன் (1-Nov-17, 6:33 pm)
பார்வை : 180

மேலே