அளவோடு விளையாட
அளவோடு விளையாட !
எல்லாமே விளையாட்டுத்தான்
இந்த இயற்கை குழந்தைகளுக்கு !
ஒவ்வொன்றும் ஒரு விதம்
நீங்கள் அழுவதில்தான் ஆனந்தம் !
மேகங்களுக்கு சொல்கிறோம்
அளவாய் அழுது விட்டு
போகட்டும்.
அதிகம் அழுவது எங்களையும்
அழ வைத்து விடும் !
உன் புன் சிரிப்பை அளவோடு
காட்டினால் போதும் !
சூரியனுக்கு சொல்கிறோம்
அதிக புன்னகை எங்களை
வறட்சியில் விட்டுவிடும்
கோபத்தை அதிகம் காட்டாதே
காற்றிடம் சொல்கிறோம்
உன் கோபத்தால் விளையும்
சேதங்களை தாங்க முடியவில்லை
உயரத்தை குறைத்து ஊஞ்சல்
ஆடினால் போதும் கடல்
அலைகளிடம் கேட்கிறோம் !
போனமுறை நீ ஆடிய
சுனாமியில் இருந்தே இன்னும்
மீளவில்லை !
அளவோடு விளையாட
அன்புடன் வேண்டுகிறோம் !