சூத்திரங்கள் மாறட்டும்

பொருத்திருந்து இகழ்தல்
அறிவின்மைதானே

அறிவின்மை நீயே..

பொறுமையின் காத்திருப்பில்
நற்குணம் நின்று காப்பாயாக..

பிறப்பின் சூத்திரம்
தலையெழுத்தாய்..
மாற்றுவதுதானே மனிதகுணம்

சூத்திரம் மாற்ற வந்தவன் நீ
நல்லகம் மாறாமல்
கொடும்புறம் மாற்றிடு

காத்திருப்பின் நேரங்களில்
சூத்திரங்கள் இனி மாறட்டும்

எழுதியவர் : மகேந்திரராஜ் பிரபாகரன் (2-Nov-17, 3:46 pm)
பார்வை : 91

மேலே