குடும்பம்

தாத்தா என்று சொல்லி பார்
அவர் அன்பினால் உண்டியை நிரப்புவார் !

பாட்டி என்று சொல்லி பார்
அவர் பல கதைகளை சொல்லி உன்னை
தூங்க வைப்பார் !

அப்பா என்று சொல்லி பார்
அவர் உனக்கு தைரியத்தை கற்றுத் தருவார் !

அம்மா என்று சொல்லி பார்
அவர் அன்பினை கலந்து உணவு பரிமாறுவாள்!

அண்ணண் என்று சொல்லு பார்
அவன் சண்டையின் வழியில் பாசத்தை
அள்ளி தருவான் !

அக்கா என்று சொல்லி பார்
அவள் அறிவுரையை கூறி உன்னை
நல்வழி படுத்துவாள் !

தம்பி என்று சொல்லி பார்
அவன் சிறுசிறு குறும்பினை செய்து
சந்தோசத்தை தருவான் !

மாமா என்று சொல்லி பார்
நீ வேண்டும் என்பதெல்லாம் வாங்கி
தருவார் !

அத்தை என்று சொல்லி பார்
வாயார மருமகளே என்று
கொஞ்சுவார் !

அண்ணி என்று சொல்லி பார்
இன்னோர் தாயாக இருப்பாள்!

அனைவரும் மனதளவில் ஒன்றாக
இருந்தால் இந்த அழகான
கூட்டை எவராலும் பிரிக்க
முடியாது !

கூட்டு குடும்பமாக இருந்தால்
வாழ்க்கையில் நடப்பது
சந்தோசமே !



கூடி வாழ்ந்தால் கோடி நன்மை !!!!!

எழுதியவர் : சத்யா (2-Nov-17, 1:47 pm)
Tanglish : kudumbam
பார்வை : 241

மேலே