ஒரு மழையில் தொடங்கி மௌனத்தில் முடிக்கலாமா ம்ம்

ஒரு மழையில் தொடங்கி மௌனத்தில் முடிக்கலாமா ம்ம்
===============================================

இப்போதெல்லாம் தனிமை ரொம்பவே பிடிச்சிருக்கு
எங்கேயும் வெளியே போகலையா ம்ம்
நீ இருக்கும் இடத்தில்
ஒரே மழை
ஒதுக்கிவைக்காத கோபங்களுடன் அணுகாதே
சரி போ ம்ம்,
போய் ஒய்யாரமாய் மழைக்கொள்,

கன்னங்களில்
நாலு போடு போடுவதாய்
மிரட்டல்
ஆனால், அது உதடுகளால் தானே ம்ம்
நேரமாகிட்டு,
என் கைகளில் இருக்கும்
உனக்காகவே பூத்த ரோஜாவை
அது வாடுமுன்னே
வாங்கிக்கொள், விடைபெற்றுக் கொள்கிறேன்

நெருங்கி வரும்போது தடைபோட முடியவில்லை
விலகி நிற்கும்
சிலபோது
ஏன் என்றும் கேட்க முடியவில்லை
சுவாசிக்காமல்
எப்படி இருக்கமுடியாதோ
அப்படித்தான்
நினைக்காமலும் இருக்கமுடியவில்லைபோல்
எல்லோரும்
ஏதோ ஒருவகையில்
உயிர் வாழ ஆசைப்படுவதே
எதையோ நினைத்திருக்கத்தானே ம்ம்

இரவு
இப்படி எதிலோ ஆரம்பித்து
அதில்
பிடித்து நிறுத்திவிட்டு
என்கூட உனக்கு
எடக்கு முடக்காடணுமா ம்ம்
சரி,
கட்டில் மேல் வா,
கபடி ஆடலாம்
நான் தோற்று கொடுக்கிறேன் ம்மம்

காதோரம் வந்து
எங்கே
எவ்விடத்தில்
உன்னிடம் நான் தொலைந்துவிட்டேன் என்பதை
நீ பேசிக்கொண்டிருக்கும்போது
எங்கே
எவ்விடத்தில்
நீ என்னை நேசிக்கத் துவங்கினாய் என்று
தேடிக்கொண்டிருப்பேன்

உனக்கு்
காமம் தான் அதிகம் பிடித்திருக்கு போல்
என்று
சண்டையிடு
ம்ம் என்கிறேன்
த்தூ என்று வழக்கமாக துப்புவாயே
அப்படி துப்பிவிட்டு
போய் படுத்துக்கொள்
நீ உறங்கிய பின்னால்
உன் காதோர முடிகளை மெல்லத்திறந்து
ஒப்பிக்கிறேன்
உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் என்று,
வெறும் கனவுதானோ என்று
அதற்குள்
மெய் மறந்து போ ம்ம்

சரி, இதெல்லாம் விடு
உன் என் மனசை உலகமாக்கிக்கலாம் வா
அதுக்குள்ள
எல்லாத்தையும் நிரப்பிக்கொள்ளலாம்
மனசுதான்
எல்லையற்ற குணங்களை உடையது
இந்த உலகம்
எல்லை உடையது,
நம் இவருடைய மனசு,
அதையும் கடந்து,
அண்டத்தையும் கடந்து, பயணிக்கக் கூடியது
பயணிக்கலாம் வா,
துளி மௌனத்திற்குப் பின்னால்
"ம்ம்ம் அப்றம்"
என்னும்போது
அப்றம் என்ன
தாம்பரம், விழுப்புரம், பல்லாவரம்
என்று
வழக்கமே இல்லாத அசடு வழிகிறேன்
ஆதலால்
என்னை என் போக்கில் விட்டுவிடு
இப்படி நெருங்கி வந்து
என் எதிர்ப்பார்ப்புகளை அதிகப்படுத்தாதே
பின் எதையாவது
நான் பேசித்தொலைய
நீ இது அது இல்லை என்று சொல்லும்போது ம்ம்ம்
மறுபடியும்
அசடு வழிய பழகிக்கணும் நான் ம்ம்,

பூக்காரன் கவிதைகள்

எழுதியவர் : அனுசரன் (3-Nov-17, 4:28 am)
பார்வை : 254

மேலே