நீயின்றி நானில்லை இறைவா
உன்னை அறிய முற்படுகையில் என்னை நானே அறிகிறேன்.
என்னை அறிய முற்படுகையில் உன்னை தானே அறிகிறேன்.
வழியெங்கும் வளியாய் என்னைத் தாலாட்ட, ஒளி மிளிர்வதெல்லாம் உன் பிரதிபலிப்பாக,
நானென்பவன் இங்கே ஏதும் ஆற்றுவதில்லை.
என் இயக்கமாக நீயே.
ஆசைகளைத் தோற்றுவித்து அவையெல்லாம் மாயை என்றும் அறிவுறுத்தும் ஞானியே!
ஆணவத்தால் திட்டமிடும் திட்டங்களை உடைத்தெறிந்து,
அதிகாரத்தால் சட்டமிடும் சட்டங்களைக் காலத்தால் சாகடித்து எங்கும் சர்வ சாட்சியாய் உன் காட்சியே காணுகிறேன் இறைவா.
பிச்சையெடுக்காமல் உழைத்து வாழும் அனைத்துயிருக்கும் ஆரோக்கியமான வாழ்வு தந்திடுவாயே.
நாளும் உன் மீது அசையாத நம்பிக்கையுடன் உந்தன் சிந்தையில் வேள்வியாய் கழியும் வாழ்வில் ஆதாரமாக நீ நின்று கருணை மழை பொழியும் எழில் கண்டு வியப்படைவதும், அக்கருணையை அனுவிப்பதும் என் நித்திய கடமையாகி வருகிறதே ஆண்டவா.
கையேந்தியோர்க்கு இல்லையென்று சொல்லாது கையிலுள்ளதை உன் பால் அளிக்க, ஏமாற்றுவோரும் நிறைபெற்று வீழ்ச்சியென்னும் பாதாளம் நோக்கி செல்ல நேரிடும் தன்நிலை பெற்று, தன் செயலில் மாற்றமுறவே.
கருணையால் பொருளுலக வீழ்ச்சியெல்லாம் ஒன்றுமில்லை அருளுலக உயர்வுக்கு முன்னால்...