அம்மா
அண்டத்தில் ஆண்டவன் படைப்பின் அதிசயம்-அம்மா
ஆறு ஐந்து பெற்றாலும் அன்பை சரிபாதி கொடுப்பவள்-அம்மா
இன்னல்கள் பல வந்தாலும் தன் இமை மூடா காற்பவள்-அம்மா
ஈரைந்து மாதங்கள் கரு சுமந்து பெற்றெடுப்பவள்-அம்மா
உயிர் சுமக்கும் அவதாரம் பெற்றவள்-அம்மா
ஊசலாடி உயிர் பிரியும் கணத்திலும் பிள்ளை நலம் வேண்டுபவள்-அம்மா
எப்பொழுதும் எல்லையற்ற அன்பு கொண்டவள்-அம்மா
ஏமாற்ற தெரியாத உள்ளம் கொண்டவள்-அம்மா
ஐயம் அறியாமல் பிள்ளைகளை வளர்தெடுப்பவள்-அம்மா
ஒழுக்கத்தை அனுதினமும் போதிபவள்-அம்மா
ஓய்வெடுக்கும் வேளையிலும் பிள்ளைக் குரல் கேட்டால் ஓடி வருபவள்-அம்மா
ஔவியம் எண்ணம் இல்லாதவள்-அம்மா