இன்னொரு அன்னை

வெளியூரு போன அப்பா
வரவில்லை நெடுநாளா..

வெளியே காட்டாமல் துக்கத்தை,
வெயிலினிலும் மழையினிலும்
தேயிலை பறித்துத் தேய்ந்து
வேலை பார்த்து நம்மைப்
படிக்கவைக்கிறாள் அம்மா..

வேடிக்கை விளையாட்டு
வேண்டாமடா தம்பி இப்போது,
நன்றாய் நாம் படித்து
நல்லபெயர் எடுப்போம்,
பொல்லாத உலகத்தில்
பெற்ற தாய்க்குப்
பெருந்துணையாய் இருப்போம்
அவள்
பேர் சிறக்க வாழ்வோம்..

அங்கே பிறக்கிறாள்
அக்கா உருவிலோர்
அன்னை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (4-Nov-17, 6:48 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : innoru annai
பார்வை : 101

மேலே