இது என்னங்க நியாயம்

எல்லா சாதியும் வாழ்ந்தாலும்
மனுச சாதியா ஒத்துமையா வாழ்ந்த ஒத்த கிராமம் அது
சுத்த கிராமம் அது..
கல்யாணமோ காரியமோ
மனசுல எசகு பிசகில்லாமா விமர்சையா நடக்கும்
ஊருக்குள்ள நடக்குற விருந்துல கலந்துக்க‌
ஊரு எல்லையில இருக்கற அய்யனாரே
தன் படை சூழ வந்து
ஒரு கட்டு கட்டிட்டுப் போவாருன்னா பாத்துக்கோங்க..
எவன் கண்ணு வச்சானோ
டிவியும் செல்போனும் புகுந்துச்சு
காதல் கதைகளும் அங்க அங்க பூத்துச்சு
ஒத்துமைக்கு ஒவ்வாம வந்துடுச்சு
வெட்டுனாங்க குத்துனாங்க‌
ஊர விட்டு ஒவ்வொருத்தரா ஜகா வாங்கினாங்க‌
இன்னைக்கு ஒத்த சனம் இல்லாத ஊருல‌
பசியோட என்னிக்குமே நடக்கப்போகாத விருந்துக்காக‌
பாவமா காத்திருக்காரு ஊரோர அய்யனாரு....

எழுதியவர் : Velanganni A (4-Nov-17, 9:35 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 100

மேலே