எத்தனை பேரோ கண்ணீர்

அடை மழையா
குடை மழையா
எத்தனை எத்தனை குடைகள்

உடை நனைய
நடை பழகும்
எத்தனை எத்தனை மழலை

படை எடுத்து
மடை திறந்த
எத்தனை எத்தனை மேகம்

தடை தகர்த்து
கடை புகுந்த
எத்தனை எத்தனை தண்ணீர்

விடை தெரியா
சிக்கலால் வடிப்பது
எத்தனை பேரோ கண்ணீர்?

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (4-Nov-17, 9:04 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 74

மேலே