இரட்டை கிழவி தமிழ் கிராமிய கவிதை
பொலு பொலு என பொழுதும் விடிந்தது//
சிலு சிலு என கதிரவனும் உதித்தது//
கீச்சு கீச்சு
என பறவைகளும் சத்தம் போட//
பட பட வென காலை தென்றலும் மெல்ல வருடியது//
துரு துரு வென மாடும் துள்ளலாய் இருக்க//
மசமச வென மாட்டு வண்டியை பூட்டிடவே//
வெடு வெடு என நில்லாது//
கட கட என வண்டியும் நகர்ந்து செல்ல //
தை தை
என மாட்டின் சலங்கை சத்தம் போட//
திரு திரு
என விழிகள் தொங்கி நிக்க//
பரபரப்பு
அடைந்த மக்களின் மனங்கள் //
கமகம
என மணக்க//
கலகலப்பான பேச்சு
கரகரக்க//
கலகல
என சிலர் சிரிக்க//
குசுகுசு என சிலர்
குசு குசுக்க//
பொலு பொலு என பொழுதும் கழிந்தது