என் காதலே

அன்பினில் செய்த சிலையா நீ.....
இல்லை,
சிலைக்கும் உயிர்க்கொடுக்கும் அன்பா நீ???

காற்றைத் தீண்டும் கனவா நீ....
இல்லை,
கனவினிலும் என்னைத் தீண்டும் காற்றா நீ???

மழையில் முளைத்த கடல்முத்தா நீ....
இல்லை,
முத்தான மழைக்கும் ஆலம்வித்தா நீ???

என் வெயிலில் உடன்வரும்
நிழலா நீ....
இல்லை,
நிழலையும் தாண்டிய உயிர்ப்புல்லாங்குழலா நீ???

நான் எழுதும் கவிதை காகிதமா நீ...
இல்லை,
என் வெள்ளைக்காகிதமும் நேசிக்கும் கவியா நீ???

மௌனமும் பேசும் மொழியா நீ...
இல்லை,
மொழிதனில் சிறந்துவிளங்கும் என் தமிழா நீ???

என் செவிக்கு விருந்தளிக்கும் இசையா நீ....
இல்லை,
இசையை மிஞ்சிய என் தாயா நீ???

நட்பாக விளங்கும் என் தோழனா நீ....
இல்லை,
தோழமையை தோற்கடிக்கும் உள்ளுணர்வா நீ???

என் கோபம் தணிக்க வந்த நீரா நீ....
இல்லை,
கோபத்தை கூட்டும் நெருப்பா நீ!!!!!

என்மேல் அன்பைக் கொட்டும் வளர்ப்பிறையா நீ....
இல்லை,
என்னை சோதிக்க வந்த
இறையா நீ!!!!!

என் உள்ளம் விரும்பும் உயிரா நீ....
இல்லை,
என் உயிர்த்தேடும் காதலா நீ!!!!

என் மனது
உன்னை நினைத்தது;
என்னை மறந்தது;
தமிழை வளர்த்தது!!!!

எழுதியவர் : பானுமதி (6-Nov-17, 9:58 pm)
சேர்த்தது : மதி
பார்வை : 325

மேலே