நீயே இந்த நந்தனின் நந்தினி

ஆதியிலே ஆண்டவன் எழுதி வைத்தானடி நீயே என்னோட பாதியென்று...

பாதியிலே நீயும் விட்டு போனதேனடி ஆண்டவன் எழுதியது பொய் சேதியென்று...

சேதிகளை கோர்வையாக்கி நானும் அடுக்கி வைத்தேனடி நீயில்லா வாழ்க்கையில் நான் கொண்ட பீதியென்று...

பீதியை விரட்ட முயற்சி மேற்கொள்கிறேனடி உன் நினைவுகளே என் சக்தியென்று...

சக்திகளையெல்லாம் ஒன்று திரட்டி புதைத்து வைக்கிறேனடி என் வாழ்வின் முக்திக்காக...

முக்தி கிட்டி விடுமா? என்றே ஆசை துளிர்க்க என் வாழ்க்கை பயணம் மாறுதடி பக்தி நோக்கி...

பக்தி நோக்கி நடைபோடும் வாழ்வில் அன்பின் சக்தி மனதில் ஆட்சி புரிகையில் மீண்டும் உன் பக்கம் திரும்புகிறதடி என் புத்தி...

புத்திக்குக் கடிவாளமிட படித்தேனடி புத்தனின் அன்பின் சக்தி...

சக்தியாய் என்னுள் புதைந்து ஆன்மாவிற்கு நீ தந்தாயடி முக்தி...

நீயே எந்தன் பேரானந்தம்...
நீயில்லையெனில் ஏது ஆனந்தம்??
இது பிரிக்க முடியாத ஆன்ம பந்தம்...
இதைவிட ஏது சொந்தம்???

ஆண்டவன் எழுத்து, அது பொய்க்குமா?
சாதி,மத அறியாமையில் மூழ்கி தவிக்கும் இவர்களெல்லாம் நமக்கொரு தடையா?

என் மனம் பாடுது சரிகமபதனி...
நீயே இந்த நந்தனின் நந்தினி...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (6-Nov-17, 9:14 pm)
பார்வை : 1603

மேலே