சிவலிங்புரம்

புத்தளத்தில் இருந்து மன்னார் நோக்கிப் போகும் B379 பாதை ஒரு காலத்தில் அரிப்பு கரையோரத்தில் முத்துகுளிப்புகாக ஓல்லாந்தரால் அமைக்கப் பட்ட பாதை. அப்பாதைக்கு கிழக்கே வில்பத்து வன பூங்காவும் மேற்கே முத்து விளையும் மன்னார் வளை குடாவும் உள்ளது கலா ஓயா உற்பட மூன்று ஆறுகள் இந்தப் பாதையை கடக்கின்றன . ஒரு காலத்தில் சேறும் கிரவலும் கொண்ட பாதையாக இருந்தது இலவன்குளம், மரிச்சுக்கட்டி . வண்ணாத்திவில்லு. பொன்பரப்பு . ஆகிய தமிழ் பெயர்கள் உள்ள கிராமங்களை பாதை தழுவிச் செல்கிறது. காலப் போக்கில் பாதை தரம் உயர்த்த பெற்று A32 ஆகியது .
கொழும்பில் இருந்து புத்தளம் மன்னார் பாதை ஊடாக யாழ்ப்பாணத்துக்கு பயணம் செய்தால் சுமார் 96 மைல்கள் தூரம் குறைவு. பொன்பரப்பு விளைச்சல் அதிகம் உள்ள வயல்களைக் கொண்ட கிராமம். அதனால் அப் பெயர் வந்திருக்கலாம் அக்கிரமத்தில் இருந்து மேற்குக் கரையோரமாக உள்ள கிராமம் தம்பண்னாவ என்ற குக் கிராமம்.
கிமு 542 இல் விஜயன் என்ற ஒரிசா மாநிலத்தின் இளவரசன் நாடு கடத்தப்பட்டு தன் 700 தோழர்களோடு தோணிகளில் வந்து இறங்கி இடம் தான் செம்மண்னும் சில பாறைகளும் உள்ள கிராமம் தம்பண்னாவ என்று மாஹவம்சம் குறிப்பிடுகிறது . இக் கிராமம் ஒரு காலத்தில் துறைமுகமாக இருந்த குதிரைமலைக்கு அருகே உள்ளது .
சிங்கள இனம் தோன்ற காரணமாக இருந்த இந்திய இளவரசன் விஜயன், ஒரு சிவபக்தன். . அப்பகுதியை ஆண்ட இயக்க இனப் பெண் குவேனி என்பவளை திருமணம் செய்து பின் அவளையும் பிள்களையும் துரத்தி விட்டு பாண்டிய தேசத்து இளவரசியை திருகேதீஸ்வரத்தில் திருமணம் செய்ததாக வரலாறு சொல்கிறது. அகவே தம்பண்னாவ கிராமம் வரலாறு உள்ள கிராமம். அக்கிராமத்தின் பெயரில் இருந்து தோன்றியதே தப்ரோபேன் Taprobane) என்ற இலங்கையின் மறு பெயர்; இக்கிராமத்துக்கும் தமிழ் நாட்டின் தாமரபரணி ஆற்றுக்கும் ஒரு காலத்தில் தொடர்பு இருந்ததாக வரலாற்றாளர்கள் சொல்கிறார்கள் .

குதிரைமலையில் இருந்து சேர மன்னனின் மகள் அல்லி ராணி அரசாண்டாள் அவள் முத்துக்களை விற்று அரேபியரிடம் குதிரைகள். வாங்கினாள் . அதனால் அத்துறைமுகதுகு அப்பெயர் வந்தது . குதிரைமலைக்கு அருகே பல்லுதுறை, கொளங்கநாதன்; என்ற இரு பண்டைய கிராமங்கள் உண்டு மூன்று பண்டைய கிணறுகளை சிதைந்த நிலையில் இக் கிராமங்களில் இன்றும் காணலாம்

இக்கிராமங்களில் சுமார் இரு நூறு மீனவ குடும்பங்கள் மட்டுமே வாழ்கிறார்கள். அக்கராமத்து தலைவன் சிவநாதன், அவ்வூர்சிகள் எல்லோரும் இந்துமத வாசிகள்.
அக்கிராமங்களுக்கு போவதற்கு பஸ் சேவை இல்லை. காட்டுப்பகுதி. குதிரைமலைக்கு ஜீப்பில் சென்று அங்கிருந்து இக் கிராமங்களுக்கு நடந்தோ அல்லது ஜீப்பிலோ, சைக்கிளிலோ செல்ல வேண்டும் சிறு கட்டிடங்கள் இருந்ததற்கு அடையாளமாக சில கற் சுவர்களைக் இன்றும் காணலாம்.
*****
கொழும்பு பல்கலை கழகத்தில் சிவதாசன் வானியற் பௌதிகத் (Astro Physics) துறையிலும் விஜயதாசா தொல்பொருளாய்வு சார்ந்த (Archaeological) துறையிலும் முனைவர் பட்டம் பெற ஆராச்சி செய்யும் மாணவர்கள். இருவரும் கொழும்பு ரோயல் கல்லூரியில் ஒன்றாகப் படித்த. நண்பர்கள். சிவதாசன் ஒரு இந்து. விஜயதாசா ஒரு பௌத்தன்
இருவரும் குதிரைமலை பகுதியை ஆண்ட குவேனி ஆட்சி செய்த பகுதியைபற்றி ஆராச்சி செய்ய, வில்பத்து வனப் பூங்காவில் A32 கிழக்குப் பக்கத்தில் சில மைல்கள் தூரத்தில் இருக்கும் காளி வில்லுக்கு அருகே அவளின் பண்டைய மாளிகைக்கு சென்றனர், விஜயன் இலங்கைக்கு சுமார் 2600 ஆண்டளவில் (கி மு 6 ஆம் நூற்றாண்டு ) வந்தபோது இம் மாளிகை காளி வில்லுக்கு அருகில் இருந்ததாக சிங்கள நூலான மகாவம்சம் சொல்கிறது. காளி வில்லு என்ற பெயரில் இருந்து சக்தித் தெய்வமான காளியை குவேனி வணங்கினாள் எனக் கருதக் கூடியதாக இருக்கிறது. காளி வில்லுவில் இருந்து குதிரைமலைக்கு நடந்து சென்றால் ஒரு மணித்தியாலப் பயணம் சிவாவும் விஜெய்யும் ஜீப்பில் சென்றதனால் அரை மணியில் காளி வில்லுவில் இருந்து போய் சேர முடிந்தது குதிரைமலையில் இருந்து மேற்கே பார்த்தால் மன்னார் குடாவின் அழகிய தோற்றம் தெரியும் .கடலுக்கு அக்கரையில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நகரம் கீழக்கரை சேது சமுத்திரத் திட்டம் செயல் படுத்தப்பட்டால் குதிரைமலை மறுபடியும் துறைமுகமாக மாறக் கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு. பல்லுதுறை, கொளங்கநாதன் ஆகிய இரு கிராமங்களும் இணைந்து “சிவலிங்கபுரம்” என்று பெயர் மாற்றம் ஊர் வாசிகளாளல் செய்யப் பட்டதை கிரவல்பாதை ஓரத்தில்: “சிவலிங்கபுரம் 3 மைல்” என்ற பெயர் பலகை, காட்டியது.
முதலில் தங்கள் ஆராச்சியை நடத்த முன் சிவலிங்கபுர மீனவர்களின் கிராமத் தலைவரான எழுபது வயது சிவராசனை என்பவரரை சிவாவும் விஜய்யும் சந்தித்து அவரின் அனுமதி தன்கள் ஆராச்சிக்கு பெற்றனர் தமிழோடு ஓரளவுக்கு சிங்களமும் அவர் பேசக் கூடியவரக இருந்தது இருவருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது.
“ ஐயா உங்கள் கிராமம் வரலாறு உள்ள கிராமம். சிங்கள இனத்தினை உருவாக்கிய விஜயன் என்ற இளவரசன் தன் தோழர்களோடு 2600 ஆண்டுகளுக்கு முன் உங்கள் கிராமத்துக்கு அருகே வந்து இறகியதாக நாங்கள் அறிந்தோம். அவரின் முதல் மனைவி குவவெனியின் ஆட்சிக்குக் கீழ் இக் கிராமம் 2600 ஆண்டுகளுக்கு முன் இருந்திருக்கலாம் என்பது நாம் அறிந்த வரலாற்றின் படி எங்கள் கணிப்பு. நீங்கள் என்ன ஐயா சொல்கிறீர்கள் ”? விஜய் கேட்டார்
“ ஆம் அது ஒரரளவுக்கு உண்மேயே. இராவணனை போல் இயக்கர் வம்சத்தை சேர்ந்தவள் குவேனி அவள் ஒரு சிவ பக்தை. குவேனியின் காலத்துக்கு முன்பு இருந்தே சிவபக்தன் இராவணனால் அமைக்கப்பட திருக்கேதீஸ்ரம் கோவில் மாந்தையில் இருந்து வருகிறது. மாந்தைபகுதி இராவணனின் மனவி மண்டோதரியின் தந்தையின் ஆட்சிக்கு அக்காலத்தில் கீழ இருந்தது திருக்கேதீஸ்ரத்தில் தான் விஜயனின் இரண்டாம் திருமணம் நடந்தது. . விஜயனும் ஓரு சிவபக்தன் . அதன் பின் சேர நாட்டின் இளவரசி அல்லி இந்தப் பகுதியை அரசாண்டாள். பாழடைந்த கட்டிங்களை நீங்கள் பார்த்திருபீர்களே “ சிவராசன் சொன்னார்.
“பார்த்தோம்.அது சரி.ஐயா, உங்கள் கிராமத்தின் தெய்வம் சிவலிங்கம். அதனால் உங்கள் ஊர் .பெயர் சிவளலிங்கபுரம் ஆயிற்று ஒரு லிங்க வடிவில் உள்ள கருப்பு நிற கல்லுக்கு சிறு கோவில் அமைத்து எவ்வளவு காலமாக வழிபட்டு வருகிறீர்கள்”?
“ அது கல் இல்லை வானத்தில் இருந்து கடவுள் எங்களுக்கு தந்த லிங்கம். இந்தபகுதியில் உள்ள செப்பு கலந்த பறைகளும் மணலும் வானத்தில் இருந்து கடவுள் எங்களுக்கு தந்த பொக்கிஷம். இந்த லிங்க வடிவத்தில் உள்ள கல் மட்டுமே கருப்பு நிறமானது இந்த லிங்கம் வடிவமான கல் எங்களை மிருகங்களின் தாக்குதலில் இருந்தும; நோய் நொடிகளில் இருந்தும் காக்கிறது. எமக்கு தேவயான மீன் வளத்தையும், முத்தையும் தருகிறது .
“ முத்து கிடைத்தால் யாருக்கு விற்பனை செய்வீர்கள்”?.
“ கடலுக்கு அக்கரையில் உள்ள கீழக்கரை முஸ்லீம் வியாபாரிகளுக்கு.”
“நாங்கள் சிவலிங்க கல்லை பரிசோதித்து பார்த்த போது அது இரும்பு கலவை கொண்ட கல் என அறிந்தோம். அதல் இருந்துஇது ஒரு விண்கல் என்பது எங்கள் முடிவு. எதிர்பாராத விதமாக அது லிங்க வடிவத்தில் உள்ளது;”
“ என்ன புதுமையான கல் என்று சொல்லுகிறீர்களா.? எனக்கு புரிகிற மாதிரி சொலுங்கோ” சிவராசன் சொன்னார்
:விஜய் சிவாவைப் பார்த்தார் பதிலை எதிர்பார்த்து.
“ ஐயா எனது அறிவியல் விளக்தை கொஞ்சம் பொறுமையாகக் கேளுங்கள். “ சிவா சொன்னார்
“ சரி சொல்லும் நாங்கள் கேட்கிறோம் “.: என்றார் சிவராசன் . அவரைச் சுற்றி சில கிராம வாசிகளும் சிவா என்ன சொல்லபோகிறார் என்று ஆவலுடன் கேட்டுக் கொண்டு இருந்தனர் ..
“விண்கல் மழை துகள்கள் பூமியில் எல்லா தேசத்திலும் அதிக வேகத்தில் பிரகாசமாக விழும். 2016 ஆண்டு சுமார் 3400 கற்கள் பூமியின் பல தேசங்களில் விழுந்துள்ளது மிக சிறிய விண் கற்கள் பூமியை அடையமுன் உராய்வினால் எரிந்து சாம்பலாகி விடும் பெரிய கற்கள் உராவையும் மீறி சாம்பலாகாமல் பூமியை வந்தடைகிறது அவைற்றை ஆங்கிலத்தில் மீட்டோராய்டுகள் என்பர் சிறிய அளவிலான 1 மீட்டர் அகலம் கொண்ட வின் கற்களும் தை விட சிறிய கற்களும் மைக்ரோமீட்டோராய்டுகள் அல்லது வான்வெளி தூசி என வகைப்படுத்தப்படுகின்றன “
விண்கல் என்பது வின்வெளியில் தோன்றும் ஒரு சிறிய பாறை அல்லது உலோகமக கல் ஆகும். பூமியின் வளிமண்டலத்தில் அதிகமாக வேகமான ஒரு வால்மீன், அல்லது சிறுகோள் நுழையும் போது, அவற்றில் இருந்து விண் கல் துகள்கள் வெளியேறுகின்றன. இந்த நிகழ்வு ஒரு விண்கல் அல்லது "எரி நட்சத்திரம்" என்று அழைக்கப்படுகிறது. பல விண்கற்களைத் தொடர்ந்தும், வானில் உள்ள அதே நிலையான புள்ளியில் இருந்து தோன்றும் தோற்றத்தை ஒரு விண்கல் மழை என்று அழைக்கப்படுகிறது..
பூமியின் வளிமண்டலத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15,000 டன் மீட்டோராய்டுகள், மற்றும் வேறுபட்ட விண்மீன் தூசி ஆகியவை உருவாகிறதாக மதிப்பிடப்பட்;டுள்ளது .
அனைத்து மீட்டோராய்டுகளும் (meteoroids) நிக்கல் மற்றும் இரும்பு கொண்டிருக்கின்றன.
ஒரு விண்கல்லின் உலோகக் கலவை விண்கல்பூமியை அடையும் போது தோன்றும் ஒளியின் நிறத்தையும் வளிமண்டலத்தில் அதன் வேகம் ஆகியவற்றைப் பொறுத்தது, உதாரணத்துக்கு அனேகமாக மஞ்சள் ஒளியாயின் விண்கல்லில் இரும்பு இருகிறது என்பது அர்த்தம். உங்கள் சிவலிங்கக் கல் கருப்பு நிறம் என்பதால் அதில் இரும்ப உலோகம் உண்டு “
“:நீங்கள் சொல்வது எல்லாம் எங்களுக்குப் புதுமையாக இருக்கிறது. அப்போ எங்கள் கிராமத்தில் உள்ள செம் மணல் அடுக்குகளும் பவளப்பாறைகல்ள் தோற்றம். பற்றி என்ன சொல்கிறீர்கள்”? ஒரு கிராமவாசி கேட்டார்
“சில பாறை விண்கற்களின் தாக்குதளிளால்தோன்றி இருக்கலாம் இது பல ஆயரம் ஆணடுகளுக்கு முன் நடந்த வின்கல் தாக்குதலாள் இருக்கலாம் செம்மண் செப்பு கலவையைக் கொண்டது. இதை தாமரம் என்பர். அதனால் தான் இந்த பகுதிக்கு தம்பபன்னி என்ற பெயர் வந்தது என்பது என் கருத்து. அதோ பாருங்கள் கொத்துக் கொத்தான மலர்கள் உடைய பசுமை மாறாச் செடி வகை. இதை ரோடோடென்ரான் செடி என்பர் இது பல காலமாக இருக்கிறது போல் தெரியுது. . இந்த் செடி செப்பு அதிகம் உள்ள மண்ணில் விரைவாக வல்ரும். இதுவும் ஒரு சான்று .முன்பு ஒரு காலத்தில் முத்ததைப் போல் செப்பும் ஏற்றுமதியாகி இருக்கலாம். யார் கண்டது ? சிவா சொன்னார்




. “இலங்கையின் முதலாவது நகரமாகவும், தலைநகராகவும் தம்பபன்னி இருந்திருக்கலாம் என நான் நினைக்கிறேன் என்றார விஜயதாசசா
“ நீங்கள் தொடர்ந்து உங்க;ள் கிராமத்து தெய்வத்தை வழிபடுங்கள். எதை நம்பி வாழ்கிறீர்களோ அதை தொடர்ந்து செய்யுங்கள்;. நாங்கள் தந்த விளக்கம் உங்கள் அறிவுக்கு விருந்து” . : என்றார் சிரித்தபடி சிவா
ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி பேசாமல் இருந்தார்கள்.
ஐம்பது வயதுடைய கிராமவாசி ஒருவர் இருவரிடம் வந்து ஒரு துணியில் சுற்றிய பரிசை இருவருக்கும் கொடுத்தார்.
“என்ன ஐயா இது;"? விஜய் கேட்டார்
“நீங்கள்; இருவரும் இந்த கிராமத்துக்கு இவ்வளவு தூரம் வந்து எங்களை சந்தித்து உரையாடி தன் நினைவாக ஆளுக்கு ஒரு முத்து எங்கள் பரிசு. என்றார் அவர்.
சிவாவும் விஜய்யும் வாயடைத்து போனார்கள்.
( யாவும் உண்மையும் கற்பனையும் கலந்தது ) .

எழுதியவர் : பொன் குலேன்திரன் – கனடா (8-Nov-17, 6:36 pm)
பார்வை : 418

மேலே