உஷார் அய்யா உஷாரு
நான் நட்புக்கு சிறு வயதிலே முக்கியத்துவம் கொடுப்பவள். பள்ளி நாட்களில் தோழிகளுக்கு நினைவு பரிசு குடுப்பது, பணம் இல்லாதர்வர்கள் உதவின்னு தேவை பட்ட நேரத்தில் உதவி செய்வது என்னோடே ஆரம்பகால பழக்கம் ஆகும். பின்னர் திரும்ப அவர்கள் ஏதும் செய்ய மாட்டார்கள், நான் அதற்க்கு எதிர்பார்க்கவும் மாட்டேன். கண்டுக்காமல் ஓதிங்கு கொள்வார்கள் . நான் மிடில் கிளாஸ் சேர்ந்தவள். இருப்பினும் நண்பர்கள் உதவி னு கேக்குறப்போ முடியாதுனு சொல்ல மனசே வராது! முடிந்த வரை பணம் குடுப்பேன், பொருள் வாங்கிகுடுப்பேன், கல்யாண பரிசாக எவ்வளவோ செய்து இருக்கிறேன். இப்பவரைக்கும் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ன முகவரி கூட தெரியாமல் பொய் விட்டது. நான் அவர்கள் மீது கோவத்தில் இதை பதிவிறக்கம் செய்ய வில்லை .. ஒரு நண்பர்களுக்கு என்னனா செய்ய வேண்டும் என்று நம் வரவுக்கு மீறி யோசிக்காதிங்கள்... முடிந்தவரை செலவை குறைச்சு கொள்ளுங்கள்...