கொடுமைக்கு ஆளான பெண்

இராமநாதபுரம்( மாவட்டம் ) திருஉத்திரகோசமங்கை பகுதியில் களக்குடி என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் கனகம். இவர் அதே ஊரை சார்ந்த வேல் என்பவரின் மகன் மணி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார், கணவனும் மனைவியும் பெரிதும் சந்தோசமாக வாழ்ந்துகொண்டு வந்தனர், முத்துமணி என்பவருக்கு ஒரு அக்காவும் உண்டு அந்த அக்காவின் பெயர் வீராயி, திருமணம் முடிந்து சிலமாதங்கள் சென்று இருவருக்கும் பெண்குழந்தை பிறந்தது, அந்த குழந்தையின் பெயர் பிரியா, இவர் பிறந்த உடனே இவர் தந்தையார் வேலையின் காரணமாக கோயம்புத்தூர் சென்றுவிட்டார், அந்த கால இடைவெளியில் வீட்டுகணக்கு வழக்கை பார்பதற்கு கனகம் ஆரம்பித்து விட்டார், இங்கு ஆரம்பித்தது கனகத்திற்கு கெட்டநேரம், கனகத்திற்கு கணக்கு பார்க்கும் போது சிலகணக்குகள் இடித்தது இதை கனகம் அவரின் அக்காவிடம் கேக்க அவர் பதில் கூறாமல் திகைத்து போனார்,மீண்டும் கனகத்திற்கு கோபம் வர அவரின் அக்காவிடம் ஆவேச குரலில் படிக்காத கணவரை ஏமாற்றலாம் என்னை ஏமாற்ற முடியாது என்று கூறிவிட்டு அணைத்து நஞ்சை புன்சைகளும் தானே பார்க்க ஆரம்பித்துவிட்டார்,சில நாட்கள் பிறகு தன் கணவர் வந்தவுடன் இதைப்பற்றி கூறினார், அவரின் கணவன் இதைக்கண்டுகொள்ளவில்லை, ஆனால் அவரின் கணவர் தன் குழந்தையைவிட அவரின் அக்காவின் குழந்தகள் மீதே அதிகம் கவனம் செலுத்துவார், இதைக்கண்ட அவரின் மனைவியின் மனம் வெதும்பியது ஆனால் இதை பெரிதும் கனகம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை, சில நாட்கள் கழிந்தன, அவரின் அக்கா மணியுடன் சாவிபோட ஆரம்பித்துவிட்டார் வீராயி தனது தம்பியுடன் உன் மனைவி என்பில்லைகளை நீ இல்லாதுபோது அடித்து அனுப்புகிறாள் வீட்டு பக்கம் அண்டவிடமாற்றா என்றும் பொய்சாடினார், அவரின் அக்காவின் பேச்சை கேட்டுக்கொண்டு, தனது மனைவி கற்பமாக இருக்கிறாள் என்று கூட பார்க்காமல் விரட்டி அடித்தார், ஆனால் கனகம் சிறிதுகூட மனம் தளரவில்லை தனது குழந்தையை அழைத்துக்கொண்டு, தனக்கு என்று அம்மாவின் சொந்த நிலத்தில் ஒரு குடிசை வீடு அமைத்து தனியாக வாழ ஆரம்பித்தார், கனகத்திற்கு ஒருதங்கையும் தந்தயும் உள்ளனர் அவர் தங்கையின் நிலைமையோ அதை விட மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது, சிறிது காலம் சென்றது மகபேறு சமயம் பெரிதும் தானாக இருந்து கசட்டப்பட்டார். வயிர் வலிக்கவும் இராமநாதபுரம் மாவட்ட தலைமை மருத்தவமனையில் சேர்ந்தார் சுகபிரசவமும் ஆனது முதலாவது ஆண்குழந்தையும் பெற்று எடுத்தார், தனது மயக்க நிலை தெளிய கூடவில்லை அதற்குள் வீராயி தனது தம்பியுடன் சாவி போட்டு குழந்தை பிரித்து வாங்கிட்டு வா என்றும் அது நமது வாரிசு அவள்ட்ட வளர்க்குகூடது என்றும் சாவி போட்டு அனப்பினார், தனது அக்காவின் பேச்சைகேட்டுக்கொண்டு தனது மனைவியுடன் தனது மகனை தன்னிடம் தருமாறு வேண்டுகோள் விடுத்தார், கனகத்திற்கு குடுக்க மனம் இயலவில்லை, அவர் கணவனிடம் என்னால் எனது மகனை குடுக்க முடியாது என்று கூறிவிட்டார், இதை கேட்ட வீராயி கனகத்தை அடித்து குழந்தை பரித்துக்கொண்டு சென்றுவிட்டனர், அப்பொழுது கனகம் தனது மகனை எதற்காக என்னிடம் இருந்து பிரித்துகொண்டு போகிறீர்கள் என்பது எனக்கு தெரியும் நீங்கள் எண்ணியது மட்டும் நடக்காது கூறிவிட்டு மனவலியோடு அன்குஇருந்து சென்றுவிட்டார்,

தொடரும்........

எழுதியவர் : மு.சண்முகநாதன் (9-Nov-17, 12:46 am)
சேர்த்தது : சண்முகநாதன்
பார்வை : 226

மேலே