க்ருஹ ப்ரவேசம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை

ஆலயம் ஸ்ரீ ஜோஸியம் மாத இதழில் அக்டோபர் 2017 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. ஸ்ரீ ஜோஸியம் மாத இதழ் ஞான ஆலயம் குழுமத்திலிருந்து திருமதி மஞ்சுளா ரமேஷ் அவர்களை நிர்வாக ஆசிரியராகக் கொண்டு சென்னையிலிருந்து வெளி வருகிறது.

அனைவரது நல்வாழ்க்கைக்கும் வழி காட்டும் சாஸ்திரங்கள் ஒரு மனிதனின் கனவு இல்லமான சொந்த வீட்டிற்குக் குடி போவது பற்றியும் நிறைய வழிகாட்டுதல்களைத் தருகின்றன.

அவற்றில் சில:

எந்த மாதத்தில் க்ருஹ ப்ரவேசம் செய்யலாம்?
மாகம்,(மாசி) பால்குனம் (பங்குனி), வைசாகம் (வைகாசி), ஜேஷ்டா (ஆனி) மாதங்களில் க்ருஹ ப்ரவேசம் செய்வ்து உத்தமம்.

கார்த்திகை, மார்கழி மாதங்களில் க்ருஹ ப்ரவேசம் செய்வது மத்யமம். – நாரதீய புராணம்

க்ருஹப் ப்ரவேசம் எந்த அயனத்தில் செய்வது நல்லது?
உத்தராயணத்தில் செய்வது நல்லது.

எந்த நட்சத்திரங்களில் க்ருஹ ப்ரவேசம் செய்வது நல்லது?
மிருகசீரிஷம், பூசம், ரேவதி, சதயம்,சித்திரை,அனுராதா (அனுஷம்), மூன்று உத்தரங்கள் (உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி) ரோஹிணி ஆகிய நட்சத்திரங்களில் க்ருஹ ப்ரவேசம் செய்வது ச்ரேஷ்டம்.

எந்தக் கிழமைகளில் க்ருஹ ப்ரவேசம் செய்யக் கூடாது?
ஞாயிறு மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் க்ருஹ ப்ரவேசம் செய்வது கூடாது.

எந்த திதிகளில் க்ருஹ ப்ரவேசம் செய்யக் கூடாது?
4,9,14 (சதுர்த்தி, நவமி, சதுர்த்தசி) மற்றும் அமாவாசை திதிகளில் க்ருஹ ப்ரவேசம் செய்யக் கூடாது.

***
ச.நாகராஜன்
Share this:

எழுதியவர் : (9-Nov-17, 5:54 am)
பார்வை : 51

மேலே