மனு தர்ம சாஸ்திரம் --------இயற்கை ----i--தாவரவியல் -------சிந்தனைக்கு
மனு தர்ம சாஸ்திரம் 2200 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டதாக ஆராய்ச்சியாளர் கூறுவர்; இத்து தவறு; அவர் ரிக் வேத காலத்தைச் சேர்ந்தவர். அவர் சரஸ்வதி நதி பற்றிப் பேசுகிறார். இது கி.மு 2000ல் இருந்த நதி. பின்னர் மறைந்து போனது. மேலும் ரிக் வேதமும் மனு தர்ம சாஸ்திரமும் ‘சதி’ எனப்படும் உடன் கட்டை ஏறும் வழக்கம் பற்றி எதுவுமே சொல்லவில்லை. இது போன்ற பல விஷயங்களை வைத்து கணக்கிட்டால் அவர், 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்று நான் கருதுகிறேன். மேலும் மனு தர்ம சாஸ்திரத்தில் உள்ள 2000-க்கும் அதிகமான ஸ்லோகங்களைப் படித்தால் அவர் சொன்ன விஷயங்களுக்கு நேர் மாறாக பல விஷயங்கள் இடைச் செருகலாக சேர்க்கப்பட்டது தெள்ளிதின் விளங்கும்.
கி.மு முதல் நூற்றாண்டில் ஆண்ட சுங்க வம்சத்தினர் தீவிர பிராமணர்கள். அவர்களுடைய காலத்தில் தீவிரவாத பிராமணர்கள் சில விஷயங்களை சூத்திரர்களுக்கு எதிராகச் சேர்த்து இருக்கலாம். இந்துக்களின் எல்லா நூல்களும் அவ்வப்போது Update அப்டேட் செய்யப்படும் — புதுப்பிக்கப்படும் — வழக்கம் உண்டு. இதனால் கடைசி விஷயத்தை மட்டும் வைத்துக் காலக் கணக்கீடு செய்வர் வெளிநாட்டினர். ஆகவே மனுவின் தற்போதைய காலம் தவறு. மேலும் அவர் எழுதிய சாத்திரம் த்ருஷத்வதி– சரஸ்வதி நதிகளுக்கு இடைப்பட்ட மக்களுக்கானதே தவிர எல்லோருக்குமானதல்ல (அவர் எழுதிய காலத்தில்). நிற்க.
சொல்ல வந்த விஷயம் மனுவுக்கு ஏன் நோபல் பரிசு தரக்கூடாது? என்பதே. மனு பேசாத பொருளல்ல; இதை சட்ட நூல் என்பதைவிட இந்துக்களின் கலைக் களஞ்சியம் என்று சொல்லலாம். 2000 க்கும் மேலான ஸ்லோகங்களில் அவர் சொல்லாத, தொடாத விஷயமே இல்லை.
இப்பொழுது தாவரவியல் விஷயங்களை மட்டும் காண்போம்:
நாங்கள் எல்லாம் B.Sc. Botany பி. எ ஸ்சி. பாடனி (தாவரவியல் படித்தபோது லின்னேயஸ் என்பவர் வகுத்த தாவரப் பகுப்பைப் (Linnaeus Classification of Plants) படித்தோம். எனக்கு 100 ஆண்டுகளுக்கு முன் படித்தவர்கள் வேறு Theory ‘தியரி’ படித்திருப்பார்கள். விஞ்ஞானம் என்பது மாறிக்கொண்டே வரும். ஆக மனு சொன்னதை எல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டியதல்ல. ஆனால் சில அடிப்படை விஷயங்கள் மாறாது.
காதலி மீது பூவை எறியாதீர்கள்!
ஜகதீஷ் சந்திர போஸின் முக்கிய பொன்மொழி: உங்கள் காதலி மீதுகூட ரோஜாப் பூவைப் போட்டு விளையாடாதீர்கள்; ஏனெனில் ரோஜாப் பூவுக்கு வலிக்கும்!
சர் ஜகதீஷ் போஸ் என்ற இந்திய விஞ்ஞானிதான் தாவரங்களுக்கும் உணர்ச்சி உண்டு என்பதை விஞ்ஞான முறையில் கருவிகளைக் கொண்டு நிரூபித்தார். உண்மையில் அவருக்கு நோபல் பரிசு கிடைத்திருக்க வேண்டும் அந்தக் காலத்தில் உள்ள இன வேற்று மையில் அவர் அமுங்கிப் போனார். ஆனால் அதற்கெல்லாம் முன்னதாகவே மனு இது பற்றிப் பேசியுள்ளார்.
மனு, தாவரவியல் பகுப்பு பற்றிப் பேசுகிறார்; செடி, கொடி, மரங்கள், பூவாது காய்க்கும் மரங்கள் பற்றிச் சொல்கிறார்.
தர்ப்பைப் புல் பாய், ஆசனம், மதச் சடங்குகளில் அதன் பயன்பாடு பற்றிப் பகர்கிறார்.
தாவரங்களின் உணர்ச்சி பற்றி அவர் சொல்லுவதாவது:-
அவைகள், சுபாவத்தின்படி செயல்படுகின்றன. அவைகளுக்கு உணர்ச்சி இருக்கிறது. இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றன
வேதங்களிலேயே மூலிகைகள் பற்றியும் அதிசயக் குளிகைகள் பற்றியும் குறிப்புகள் உள்ளபோது மனு இவ்வளவு சொல்லுவதில் வியப்பில்லை. மேலும் உபநிஷத காலத்திலேயே சிறிய ஆலம் விதையிலிருந்து பிரம்மாண்ட மரம் உருவாவதை உவமையாகச் சொல்லி பாடம் நடத்தினர். தலங்கள் தோறும் புனித மரங்கள் இருந்திருக்கின்றன. நம்மாழ்வாருக்கும் தான்சேன் என்ற கவிஞருக்கும் அருள்புரிந்த புளியமரம், கிருஷ்ணன் ஆலிலைக் கிருஷ்ணனாக மிதந்த ஆலமரம், சிவன் அடிமுடி காணும் விஷயத்தில் பொய் சொன்ன தாழம்பூ, புத்தருக்கு ஞானம் கொடுத்த அரச மரம், பிராமணர்களுக்கு ஸமித்து கொடுக்கும் அரச, பலாச மரங்கள், பாண்டவர்கள் ஆயுதங்களை ஒளித்து வைத்த வன்னி மரம் என்று நூற்றுக்கணக்கான மரங்கள் வில்வம், துளசி போன்ற புனித தாவரங்கள் இப்படி பட்டியல் நீண்டு கொண்டே — முடிவு இல்லாமல் போகும்.
ஜகதீஷ் போசுக்கும் மனுவுக்கும் தாவரவியல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு கொடுக்கலாம்.
மரங்களையோ செடி கொடிகளையோ பிராமணர்கள் வெட்டினால் ஆயிரம் வேத மந்திரம் சொல்ல வேண்டும் என்று மனு விதிக்கிறார்.
புனித மரங்கள் பற்றிப் பேசும் மனு, என்ன மரங்களைக் கொண்டு (staff) தடிகள் செய்ய வேண்டும் என்றும் கட்டளை இடுகிறார்.
மனுவுக்கு நோபல் பரிசு தரலாமே! )
Manu, not only a Law Maker but also a Great Botanist!
‘Save the Trees‘ and ‘Save the Forests’ in Manu Smrti!
( … 255 Indian trees, herbs and flowers mentioned in Brhat Samhita Part-1, …
ஸ்வாமிநாதன்