சுயநலம்
“சொந்தக் காரியம் என்று வரும் போது;
மனிதன் குருடனாகி விடுகிறான்”
சுயநலம் ஒரு தனிப்பட்ட மனிதனில் மட்டும் காணப்படும் குணமல்ல. அரசியல் கட்சிகள் , ஒரு நாட்டினை ஆளும் அரசின் போக்கு , ஒரு தொழில் ஸ்தாபனம் , ஏன் குடும்பத்தில் மனைவி , குழந்தைகள் , பெற்றோர்கள், சகோதரங்கள், இனத்தவர்கள் போன்றோரிடமும் இக் குணம் காணப்படுகிறது. சுயநலக் குணம் வளரும் சூழ்நிலையைப் பொறுத்தது. போட்டி என்று வந்தவுடன் தோழ்வியை சந்திக்த் திறனில்லாததால் சுயநலப் போக்கினை கடைப்பிடித்து வெற்றி பெற நினைப்பது சகஜம். தனது நலத்தை மட்டும் கருத்தில் கொண்டு செயல் படுபவர்கள் மற்றவர்களைப் பற்றி சிந்திப்பது குறைவு. தமக்கென்ற ஒரு வட்டத்துக்குள் வாழ்பவர்கள். அதனால் அவர்கள் அறிவு விரிவடைவதில்லை. காரணம் தம்ம அறிவை மற்றவர்களோடு பகரிர்ந்து கொள்ளத் தயங்குவார்கள்.
ஒரு பெரிய தொழில் ஸ்தாபனத்துக்கு நேர்முகப் பரீட்சைக்குப் ஒருவர் போன போது அவரிடம் கேட்ட முதல் கேள்வி “ உம்மால் எமது ஸ்தாபனத்துக்கு என்ன செய்யமுடியும் ?' என்பதே. ஸ்தாபனம் தனது வருமானத்தை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளது என்பதை அக்கேள்வி குறிக்கிறது. அந்த தொழில் ஸ்தாபனம் சமூகத்தில் வாழும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்களை தயாரிப்பதினால், அக் கேள்வியை சுயநலப் போக்கின்றி ' நீர் சமுதாயத்துக்கு எமது ஸ்தாபனத்தின் மூலம் என்ன செய்ய முடியும்:”? என்று கேட்டிருந்தால் சுயநலம் அங்கு தொனித்திருக்காது.
சூழ்நிலை சுயநலத்துக்கு வித்திடுகிறது
பேராசை, அந்தஸ்தை உயர்த்த வேண்டும், குறுக்கு வழியில் முன்னேற வேண்டும் போன்ற போக்குள்ளவர்கள் பெரும் பாலும் சுயநலப்போக்குள்ளவர்கள். ஒரு குடும்பத்தில் பெற்றோர்கள் சுயநலப் போக்குள்ளவர்களாக மற்றவர்களைப் பற்றி சிந்தியாது வாழ்ந்தால் அவர்களைப் பார்த்து பிள்ளைகளும் அப்போக்கினை பின்பற்றத் தொடங்கிவிடுவார்கள். தம் உறவினர்கள் தம்மை விட அந்தஸ்தில் ஒரு படி உயர்ந்தவர்கள் என அறிந்தால் அவர்களை விட அந்தஸ்தில் தாம் உயரவேண்டும் என்ற எண்ணம் சுயநலப்போக்கிற்கு வித்திடுகிறது. காரணம் தமது திட்டஙகளையும் தமது நிதி நிலமைபற்றியும் பறர் அறியக் கூடாது என்ற எண்ணம் தோன்றுகிறது. சுயநலப் போக்கினால் தம்மை தாமே பாதுகாத்துக் கொள்கிறோம் என்ற உணர்வு உருவாகிறது . ஆனால் உண்மையில் அப்போக்கினால் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை பலருடன் கலந்து ஆலொசித்த அவர்கள் அனுபவங்களை அறிந்து தங்கள் பிரச்சனைகளை தீர்க்கும் சந்தர்பத்தை இழக்கிறார்கள். உதாரணத்துக்கு வேலையில் இருந்து நிற்பாட்டப்பட்ட ஒருவா தனது பிரச்சனையை தன் நணபர்களோடு பகிராமல் இருப்பதினால் தான் செய்த வேலை போன்று ஒரு வேலை நண்பர் ஒருவர் வேலை செய்யும் ஸ்தாபனத்தில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் சந்தர்பத்தை இழக்கிறார். போட்டியும் போறாமையும் சுயநலத்திற்கு உரமாகின்றன. தோழ்வியை ஏற்றுக்கொள்ளும் சக்தி அற்வர்கள் சுயநலப்போக்கினை கடைப்பிடிப்பார்கள்.
குழந்தைகளும் சுயநலமும்.
சில குழந்தைகளுக்கு தம் பொருளை வேறு ஒருவர் எடுத்தால் கோபம் பத்திக் கொண்டு.. அதுவும் தனிப்பிள்ளையாய் இருக்கும் போது செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்டால் எல்லாம் எனக்கே என்ற எண்ணம் தானாகவே வளருகிறது. பல சகோதரங்ஙகளுடன் பிறந்த குழந்தைகளிடையே இக்குணம் வளரும் சந்தர்ப்பம் குறைவு. சிறுவயதிலேயை குழந்தை மற்றைய குழந்தைகளுடன் சேர்ந்து பகிர்ந்து விளையாடும் பழக்கத்தை பெற்றோர்கள் நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும். படிப்பில் போட்டி என்று வந்தவுடன் சுயநலம் சில மாணவர்களிடம் தொத்திக் கொள்கிறது. அதுவும் பரீடசை நெருங்கும் போது தமது அறிவை மற்றைய மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளத் தயங்குவார்கள். குழநதைகள் தமது சுயநலப்போக்கினால் தமக்கு ஒரு பாதுகாப்பினை தேடிக்கொள்வதாக நினைத்தாலும் சிலசமயம் அப்போக்கு அவர்களுக்கு பாதகமாக அமைந்து விடுகிறது.
குடும்பத்தில் சுயநலம்
குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே சுயநலம் வளர்நதால் மிகிழ்ச்சியான குடும்பவாழ்வு அற்றுப் போகும். அவர்களிடையே சந்தேகம் , பொறாமை, வளரத் தொடங்கிவிடும். இது முடிவில் விவாகரத்தில் போய் முடியும். சுயநலம் குடும்பத்தில் தோன்றுவதற்கு முக்கிய காரணம் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்து பழகாததே. சில சமயம் அழகுக்காக ஒரு பெண்ணைக் காதலித்து திருமனம் செய்த ஒருவன் அவளின் அழகை மட்டுமா இரசிக்க வேண்டும்?. அவளின் உடல் தனது சொத்தென நினைப்பதுண்டு. இதனால் வேறு ஆடவர்கள் மனைவியின் அழகைப் பற்றி விமர்சித்தால் கணவனுக்கு கோபம் வருவதுண்டு. இது மனைவியின் நடத்தை மேல் சந்தேதேகத்தை உருவாக்கிறது. இது போன்றே மனைவியும் அழகுக்கும் அந்தஸதுக்காக ஒரு ஆடவனை காதலித்து திருமணம் செய்திருந்தால் அவள் மனதில் அவன் வேரூண்டி விடுகிறான். வேறு பெண்களுடன் அவன் பேசுவது அவளுக்கு அவன் மேல் சந்தேகத்தை உருவாக்கிறது. இந்த நம்பிககை இல்லாத போக்கு சுயநலத்தின் பிரதிபலிப்பேயாகும். மிகக் கூடிய காதல் அல்லது ஆசை நிமித்தம் சுயநலம் தோன்றுகிறது. பற்றற்ற வாழ்வு வாழ்வது அவ்வளவு இலகுவல்ல. இதற்கு அனுபவமும் முதிர்ச்சியும் அவசியம். புத்தர் அரச பரம்பரையில் பிறந்தாலும் எல்லாவறறையும் துறந்து பற்றற்ற வாழ்வு வாழ்நதார். அவர்' சுயநலவாதியாக வாழ எண்ணியிருந்தால் புத்த மதம் உலகுக்கு வந்திருக்காது. இது போன்றே மகாத்மா காந்தியும். படித்து பட்ட பெற்ற பிராமணரானாலும் சாதி வேகுபாட்டினை வெறுத்து சுயநலமற்ற வாழக்கையை நாட்டுக்காக வாழ்ந்தார்.
அரசாட்சியில் சுயநலம்
தமிழ்நாட்டில் காமராஜர் அறிஞர் அண்ணா , கக்கன் போன்ற தலைவர்கள் வாழ்ந்த எளிமையான வாழக்கை திரும்பவும் அரசியல் தலைவர்களிடையே திரும்பி வருமா என்பது சந்தேகம். தற்போது பணத்துக்கும் , பதவிக்கும் , போகத்திறகாக வாழும் தமிழ்நாட்டு அரசியல் வாதிகளுக்கும் முன்னைய அரசியல்வாதிகள் வாழ்ந்த சுயநலமற்ற வாழ்க்கைக்கும.; இடைவெளி வெகுதூரம். சர்வாதிகாரிககளும் , அரசியல் மூலம் உயர் பதவியும் அதிகாரமும் பெற்றவர்கள் தமது நிலையை பாதுகாத்துக் கொள்ள சுயநலப் போக்கினை கடைப்பிடிக்கின்றனர். சதாம் ஹுசெயின் , இடி அமின் , ஹிட்லர், தலீபன் ஆட்சியாளர்கள் போன்றோர் இதற்கு உவமை. அநியாயம், நீதி , தர்மம். இரக்கம் ஆகியவற்றிற்கு அவர்கள் மனதில் இடமில்லை. சுயநலப் போக்கினாலேயே உரிமை மீறல்கள் இடம் பெறுகின்றன. சிறிலஙகாவில் சமாதானம் வேண்டாம் போர் வேண்டும் என்று கூக்குரலிடும் அரசியல் கடசிகளும் இராணுவ அஙகத்தினரிரும் நாட்டின் பொருளாதாரத்தில அக்கரையில்லாதவர்கள். போரின் மூலம் தாம் எவ்வளவுக்கு பணத்தைப் ஊழல்கள் மூலம் பெறலாம் என்பதே அவர்கள் நோக்கமாகும்.. பல்லின மக்கள் வாழும் மக்களிடையே இனக் கலவரஙகளைத் தூண்டிவிட்டு வேடிக்கைப் பார்க்கும் ஊடகஙகுளும் அரசியல் வாதிகளும சுயநலத்தின் உருவங்களே. இச் சுயநலக் குணமுள்ளவர்களின் ஒவ்வொரு செயலின் விளைவும் தமக்கு சாதகமாகவே இருக்க விரும்புவர். அகங்காரம் அவர்களை ஆட்கொள்ளும். எது சரி எது பிழை என்பதை அலசி ஆராய்ந்து தீர்மானங்கள் எடுக்கமாட்டார்கள். சுயநலப்போக்கு உள்ள மனம் ஏறகனவே தீர்மானததை எடுத்துவிடும். அதனால் பிறருடன் கலந்துரையாடி அவர்கள் கருத்துக்களை ஏற்கமாட்டார்கள். இதனால் அவர்களுக்குள்ளே ஒரு பயம் வளரத் தோன்றும். தீர்மானங்கள் தீடிரென எடுக்கப்படும். தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தமக்கென பாதுகாப்புப் படையினை உருவாக்கிக் கொள்வர். மக்களிடையே ஒரு போலித் தோற்றத்தை உருவாக்குவர். இத்தகைய சுயநல வாதிகளுக்கு ஆமாhம் சாமி போடுவோர் கூட சுயநலவாதிகளாகவே இருப்பார்கள். காரணம் அவருடன் ஒத்துப் பாடி தாம் பெறவேண்டியதை பெற்று கொள்வதே அவர்கள் நோக்கம். இஙகு சுயநலம் ஒரு தொற்று வியாதியாகி விடுகிறது. ஊழல் , அதிகார துஷ்பிரயோகம் , ஒழுக்கமினமை போன்றவை சுயநலப் போக்கிள விளைவே. அதவும் அரசியலில் இது கொலைகளிலும், பழிவாங்கும் வன்முறைகளிலும் போய்முடிகிறது. தமக்குள் உள்ள சுயநலப்போக்கை தமக்குள் மாத்திரம் வைத்துக் கொள்ளாமல் மக்களிடையேயும் பரவச் செய்கிறார்கள். அரசன் எவ்வழியோ, மக்களும் அவ்வழியே ஆகிறது.
கல்வியில் சுயநலம்.
முற்காலத்தில் குரு சிஷ்ய உறவில் சுயநலமிருந்தது. குருவானவர் தனக்குத் தெரிந்த கலை முழுவதையும் தன் மாணவனுக்குச் சொல்லிக் கொடுப்பது கிடையாது. காரணம் குருவுக்கு மிஞ்சிய சிஷ்யனாகிவிடுவானோ என்ற பயம். தற்காலத்தில் பல்கலைக் கழகங்களில பாடத்திட்டத்துக்கு அமைய கல்விபோதிக்கப்படுகிறது. பல இன மாணவர்கள் பயிலும் இடத்தில் சுயநலம் காரணமாக இன, சாதி வேறுபாட்டை கல்வி போதிப்பதிலும், மாணவர்களுடன் பழகுவதிலும்; காணக் கூடியதாயிருக்கிறது. பரீட்சைக் காலத்தில் மாணவர்களுக்கிடையே போட்டிகள் அதிகம். பாடக்குறிப்புகள் , புத்தகஙகள் திடீரேன மறைந்து விடும். தமக்குதெரிந்த விடயங்களை மற்வர்களுக்குச் சொல்லிக் கொடுக்கத் தயங்குவார்கள். இது சில சமயம் அவர்களுக்குப் பாதகமாக அமைந்து விடும். சுயநலப் போக்குள்ள மாணவர்கள் தனித்து விடப்படுகிறார்கள். அதனால் அவர்களுக்கு ஒரு ஆபத்தென்றால் மாணவர்கள் உதவிக்குப் போகத் தயங்குவார்கள். படிப்பில் திறமைசாலியான மாணவன் வகுப்பில் தானே எப்போதும் முதலாவதாக வரவேண்டும் என்ற நோக்கத்தினால் சுயநலம் அவனில் ஊறிவிடுகிறது. ஒரு வித அகங்கராமும் அதற்கு காரணமாகிறது.
தொழில் ஸ்தாபனத்தில் சுயநலம்.
தொழில் செய்யும் ஸ்தாபனம் ஒன்றில் சில உயர்பதவியில் இருப்பவர்களிடையே சுயநலப் போக்கு வர அவர்கள் வகிக்கும் பதவியே காரணமாகிறது. தமது பதவிக்கு தமக்கு கீழ் இருப்பவர்களால் பங்கம் வரக் கூடாது என்ற நோக்கத்தால் தாம் செய்யும் ஒவ்வொரு செயல்களிலும் , தீர்மானங்களிலும் சுயநலத்தைக் கடைப்பிடிப்பார்கள். தமக்கு கீழ் வேலை செய்யும் ஒருவர் தம்மை விட அதிகம் படித்தவராகுவம் திறமைசாலியாகவும் இருந்தால் எங்கே அவர் தமது பதவிக்கு போட்டியாக வந்துவிடுவாரோ என்ற காரணத்தால் அவரின் திறமையை மற்றவர்கள் அறியாது செய்து விடுவர். சில சமயம் அவரின் கண்டுபிடிப்புகளை, செயற்பாடுகளை தனக்கு சாதகமாக பயன் படுத்தி பெயர் எடுத்துக் கொள்வார். ஒரு வங்கியின் முகமையாளரின் போனஸ் அந்த வங்கியின் வருட விற்பனையில் தங்கியுள்ளது. ஆறு பேர் உதவியாளராக வேலை செய்யும் அந்த வங்கியின் 75 விகித விற்பனைக்கு காரணம் ஒரு ஊழியரே. தனக்குக் கிடைக்கும் போனஸ் அந்த ஊழியரில் தங்ஙகியுள்ளது என்ற காரணத்தால் வங்கியின் வேறு பகுதியில் முகைமையாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்ய விடாததவாறு பல வழிகளை கையாளுவார். இங்கு திறமை ஒடுக்குப்படுகிறது. ஊழியர் ஒரு அடிமையாக நடத்தப்படுகிறார்.ஆனால் தன் திறமையில் நம்பிக்கை உள்ள ஊழியர் அந்த அழுங்குப் பிடியில் இருந்து மீறி வெளியேறும் போது வெகுவாகப் பாதிக்கப் படுவது அம் முகமையாளரே. ஸ்தாபனத்தின் உரிமையாளர் அல்லது செயற்குழு கூட சுயநலப் போக்குடன் இயங்குவதை நாம் காணமுடிகிறது. இதற்கு காரணம் முலதனம் செய்தவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதே. செலவைக் குறைப்பதற்காக ஆட்குறைப்பு செய்ய வேண்டும் என்ற நிலை வந்தவுடன் எவரை வேலையில் இருந்து நிற்பாட்ட வேண்டும் என்பiதை தீர்மானிப்பபது பெரும் பாலும் பெரும் பதவிகளில் பெரும் சம்பளத்தை பெறுபவர்களே. அவர்கள் பெறும் சம்பளம் ஐந்து பேர் பெறும் ஊதியத்துக்கு சமன். ஆதலால் தங்களை பாதுகாத்துக் கொண்டு தமக்குக் கீழ் குறைந்த ஊதியம் பெறுபவர்களையே வேலையில் இருந்து நீக்குவார்கள். ஸ்தாபனங்கள் உருவாக்கும் பொருட்கள் அல்லது வழஙகும் சேவை கூட ஸ்தாபனத்தின் சுயநலத்திற்கானவையே. மெக்டொனல்ஸ் போனற பிரபல்யமான ஸதாபனம் தயாரிக்கும் உணலுகள் தேக ஆராத்தியத்திற்கு உகந்ததல்ல. இது போனறு கொக்கோ கோலா பானமும் தேக ஆரொக்கயத்திற்கு நல்லதல்ல. ஆனால் அவைற்றைத் தயாரிக்கும் ஸ்தாபனஙகள் மக்களின் தேக ஆரொக்கியத்தைப் பற்றி கவலைப் படுவது கிடையாது. வருமானமே அவர்களின் முக்கிய நோக்கு. இதுவும் ஒருவகை சுயநலப் போக்கேயாம்.
அமெரிக்கா சுயநலப் போக்குள்ள நாடா?
ஒவ்வொரு நாட்டின் கொள்கையும் ஒரு தனிமனிதனின் தனிப்பட்ட கொள்கை போன்றது. பல இனமக்கள் வாழும் அமெரிக்கா போன்ற நாட்டில்; இனத்துவேஷம் , மதத் துவேஷம் , நிறத் துவேஷம் பொன்றவை அரசி;ன சுயநலப் போக்கின் பிரதிபலிப்பே. ஒரு காலத்தில் நீக்கிரோ அடிமைகளை ஆபிரிக்காவிலிருந்து தம் நாட்டுக்கு கப்பலில் கொண்டு வந்து அவர்கள் கடும் உழைபில் பணக்காரார்களான வெள்ளையின அமெரிக்கர்கள் பலர். அமெரிக்க சரித்திரத்தை புரட்டிப் பார்த்தால்' அச்செயகள் அந்நாட்டினை வெட்கி தலை குனிய வைக்கிறது. இன்று அது முற்றாக நீங்கி விடவில்லை. அரசியல் வாதிகள் பிறநாடுகளுடன் போர் தொடுக்கு ஐ.நா சபைக்கு எடுத்துச் சொன் பொய்யும் புரட்டும், ஏதோ ஜனநாயகத்தை பாதுகாக்க. சர்வாதிகாரிகளை இல்லாமல் செய்யப் போகிறோம் என்ற அறை கூவல் எல்லாம தமக்கு அதனால் அரசியல் லாபமும். தாம் முதலீடு இட செய்த ஸ்தாபனத்திற்கு வருமமானமும் வருவதே அவார்களி;ன் சுயநல நோக்மாகும். இதில் அகங்காரம் , அதிகாரம், பலம் ஆகியவற்றை நிலைiநாட்ட அரசு இது போன்ற சுயநலம் கலந்த கொள்கைகளை கடைப்பிடிக்கின்றன. மூன்றாம் உலக நாடுகளின் வளர்ச்சியில் அக்கரை காட்டாது தன் வளர்ச்சியில் மட்டுமே அக்கரை காட்டும் போக்கு அமெரிக்காவின் சுயநலப் போக்காகும்;. எல்லா நாடுகளும் தனது எண்ணத்துக் கேற்ப நடக்கவேண்டும், தனது இராணுவப் பலத்தை பாவித்து போர் தொடுத்தால் பலம் குறைந்த நாட்டின் மக்கள் சீரழிவுக்கு ஆளாகுவார்கள் என்று சிந்திக்கும் நிலை கிடையாது. எங்கு கனி வளம் அதிகமாக உள்ளதோ, எது கேந்திர ஸ்தானமக அமைந்துள்ளதோ அங்கு அவர்களின் சுயநலப் பார்வை செல்கிறது. சுயநலப்போக்குள்ள அமெரிக்காவின் ஜனத்தொகை உலக நாடுகளின் ஜனத்தொகையின் 14 விகிதமே ஆனால் மாபெரும் உலக ஜனத்தொகையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே அதன் சுயநல நோக்கமாகும்.
சுயநலம் ஒரு தொற்று வியாதி என்றும் கூறலாம். சுயநலவாதிகளோடு உறவு கொள்பவர்கள் தம்மை அறியாமலே அக் குணம் தம்மை பீடிக்க விட்டுவிடுவார்கள். சுயநலம் இல்லாத வாழ்வை தர்மத்தின் வாழ்வு.
*****