சூரியனுக்குள் ஓர்நாள்

ஒளியொன்று இருப்பது
எத்தனை உண்மையோ
அங்கே உயிரொன்று இருப்பதும்
அத்தனை உண்மை.

சூரியனின் செந்நிற பிளம்பினுள்ளே
இன்று சென்றேன்..

அதீதசிகப்பு
அளவான மஞ்சள்
அதனுள்
கரும்புள்ளியாய் காட்சியிருந்தது..

பிரவிபலன் கண்டுண்டது கண்கள்

கண்டுண்ட காட்சி
என்னில் உன்
நினைவுக்கொப்பானது

உவமை நீயாயிருக்க
உனையே பெயராக்கிவைத்திருக்கவேண்டும்

தாமதம்...
என்றோ முந்திவிட்டான் விசுவாமித்திரன்.

எழுதியவர் : மகேந்திரராஜ் பிரபாகரன் (9-Nov-17, 1:24 pm)
பார்வை : 93

மேலே