சீதனம்....சீதனம்...

சீதனம் எனும் வேதனத்தை,
சாதனைகள் படைத்தவன்போல்,
கடுமையாக கேட்டு நிற்கின்றாய்...

சீதனத்தின் மெத்தையிலே,
சொத்தையைத்தான் புதைத்துக்கொண்டு..
வித்தைகளை காட்டுதற்கு....
கத்தையாக கேட்டுனிற்கின்றாய்...

மணிக்கணக்கில் பேரம் பேசி...
தரம் கெட்ட சீதனத்தை,
தன் கணக்கில் வரவு வைக்க,
தாவென்று கேட்டுனிற்கின்றாய்...

மனம் ஒத்த வாழ்க்கை வந்தும்..
குணம் ஒத்த தாரம் தந்தும்...
கரம் மட்டும் பிடிப்பதென்றால்
பணக் கட்டும் வேண்டுமென்றாய்...

நிறமாக பெண்ணிருந்தால்...
குறை ஒன்றும் இல்லையென்றாய்...

தரை ஒன்று இருந்து விட்டால்,
கைப்பிடிக்க தடையொன்றும் இல்லையென்றாய்...

குமரிகளை வைத்துக் கொண்டு..
குமுரி அழும் குடும்பத்திடம்,
தறுமதியை கேட்பதுபோல்,
வெகுமதியாய் கேட்டுனின்றாய்..

கனமானம் இல்லாத..
அவமானம் பெற்ற நீயோ..!
சுகமான வாழ்க்கைக்காக சுய புத்தி இழந்துனின்றாய்.....

உள்ளத்துக்கு வேட்டு வைத்து...
மற்றவர்களை சாட்டு வைத்து..
கேட்டுப் பெறும் சீதனத்தை...
அனுபவிக்க துணிந்து நின்றாய்...

வாரிசை கொடுப்பதற்கும்..
ஒத்தாசை செய்வதற்கும்..
சொத்தாசை கொண்டலையும்..
நப்பாசை பிடித்த நீயோ..!
என்னாசை மனைவி என...
எப்பாசை கொண்டழைப்பாய்...

இஸ்லாத்தில் பிறந்து கொண்டு...
இறை மறையை அறிந்து கொண்டு...
கைப்பிடிக்க வேண்டுமென்றால்..
கைக்கூலி வேண்டுமென்றாய்...

எங்களுக்கு தஞ்சம் தர
உன் நெஞ்சத்திலே பஞ்சம் என்றாய்...

நாங்கள் கெஞ்சித்தான் கேட்டுவிட்டால்...
மஞ்சம்தான் நான் கொள்ள லஞ்சம்தான் வேண்டுமென்றாய்..

இஸ்லாம்தான் வெறுக்குமிந்த
பஞ்ஞமா பாதகத்தை,
நஞ்சாய்த்தான் அருந்துகின்றாய்..

சீர்கெட்ட சீதனத்தை, சீர்வரிசை என்று சொல்லி,
சீரழிவை தேடினின்றாய்..

வேறுவழி எங்களுக்கில்லை..
வாழாவெட்டியாக வாழ்ந்துவிட்டு போகின்றோம்.

நீயும் வாழ்ந்து விட்டு, மாண்டுவிட்டு போ...
மறுமையில் கேள்விகேட்டு, இறைவன் உனக்கு நிச்சயம் கால்க்கட்டும் போட்டுவிடுவான்.....

எழுதியவர் : கவிப் புயல்:- A.H.M.சஜா (10-Nov-17, 5:05 am)
சேர்த்தது : சஜா
பார்வை : 263

மேலே