மஸ்ஜித் இமாம்களின் ஓர் குரல்

மஸ்ஜித் இமாம்களின் ஓர் குரல்

மஸ்ஜித் இமாம்களின் ஓர்குரல்

ஜம்இய்யாவே நீ செய்வது சரிதானா❓

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா என்பது இஸ்லாமிய சமூகத்துக்கு சேவை செய்யும் அமைப்பு என்று இன்றுதான்(2017-11-01) எனது புத்திக்கு பட்டது.

என்னை மன்னிக்க வேண்டும்.

அந்த கவலையில்தான் இன்று நான் பேசிய ரெகோடின்கள் அமைந்து விட்டது.

இல்லையானால் ஒருபோதும் ஜம்இய்யாவை தரம் குறைத்து பேசிய பழக்கம் இல்லை.

ஜம்இய்யா என்ன செய்திருக்கிறது என்று பார்த்தால் 100% வீதம் அடித்து சொல்லலாம்.

100 அல்லது 150 உலமாக்களுக்கு தொழில் வழங்கியுள்ளது.

இவர்கள் மட்டும்தான் ஜம்இய்யாவுக்கு ஆதரவாக பேசுகிறார்கள்.
மற்றும் சிலர் ஜம்இய்யா எதை வேண்டுமானாலும் செய்துவிட்டு போகட்டும் என்ற சிந்தனையில் இருக்கிறார்கள்❗

ஏன் இவ்வளவு 15 இற்கும் அதிகமான பிரிவுகளையும் ஆரம்பித்து முன்னெடுத்து செல்கின்ற ஜம்இய்யாவுக்கு பள்ளிவாயல் இமாம்கள் விடயமாக ஒரு பிரிவை ஆரம்பிக்க முடியாமல் போனது❓

பெண்கள் வந்து எங்களுக்கு மகளிர் பிரிவு ஆரம்பிக்க சொன்னார்களா❓

வாலிபர்கள் வந்து இளைஞர் பிரிவு ஆரம்பிக்க சொன்னார்களா❓

வியாபாரிகள் வந்து பைதுஸ் ஸகாத் பிரிவு ஆரம்பிக்க சொன்னார்களா❓

பிறமதத்தினர் வந்து CCC ஆரம்பிக்க சொன்னார்களா❓

சிறுவர்கள் வந்து மக்தப் பிரிவு ஆரம்பிக்க சொன்னார்களா❓

பொதுமக்கள் வந்து சமூக சேவைப் பிரிவு ஆரம்பிக்க சொன்னார்களா❓

முதலாலிமார்கள் வந்து ஹலால் பிரிவு ஆரம்பிக்க சொன்னார்களா❓

இலங்கை முஸ்லிம்கள் ஒன்றிணைந்து பிறை பார்க்க சொன்னார்களா❓

பாடசாலைகள் வந்து கல்விக் குழு ஆரம்பிக்க சொன்னார்களா❓

மீடியாக்கள் வந்து ஊடகம்/பிரச்சாரம்/வெளியீட்டு பிரிவுகளை ஆரம்பிக்க சொன்னார்களா❓

இல்லையே....❗❗❗

அகில இலங்கை ஜம்ஒய்யத்துல் உலமாதானே ஆரம்பித்தது❓❗

ஏன் பள்ளிவாயல் இமாம்கள் வந்து கூறவில்லை என்பதற்காக மௌனமாக இருக்கிறீர்கள்❓❓❓

பள்ளிவாயல் நிருவாகத்துக்கு பயமா❓

அல்லது பணக்காரர்கள் பகைத்து விடுவார்கள் என்ற பயமா❓

அல்லது சமூகம் ஒதுக்கிவிடும் என்ற பயமா❓

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பெயரை ஏன் உலமாக்கள் சபை என்று வைத்து விட்டு, பள்ளிவாயல் இமாம்கள் விடயமாக கவனம் செலுத்தாமல் இருக்கிறீர்கள்❓

சிந்தித்து பாருங்கள்.
தெளிவு கிடைக்கும்.

ஜனாதிபதிக்காக ஜெனீவா வரை சென்றது ஜம்இய்யா❗

அரசியலுக்காக அமைச்சர்கள் வரை சென்றது ஜம்இய்யா❗

அகதிகளுக்காக கடல் கடந்து உதவியது ஜம்இய்யா❗

பிறமத பாடசாலைக்கு விஞ்ஞான ஆய்வுகூடம் திறந்து கொடுத்தது ஜம்இய்யா❗

நாம் இதுவரை குறை கூறினோமா❓❓❓

இல்லையே....❗
இல்லையே....❗

ஏன் எமக்காக பேச மாட்டீர்கள்❓

ஏன் இமாம்களுக்காக பேச மாட்டீர்கள்❓

ஏன் எம்மை ஒதுக்குகிறீர்கள்❓

கொஞ்சம் மனந்திறந்து சிந்தித்து பார்ப்பீர்களாக.

அல்லாஹ் உங்களது சேவைகளை எமக்கும் விரிவு படுத்துவானாக.

என்றும் அன்புடன்

பௌசுல் அமீர்(முஅய்யிதீ),
பள்ளிவாயல் இமாம்கள் சார்பாக.

எழுதியவர் : பெளசுல் அமீர் (10-Nov-17, 7:50 am)
சேர்த்தது : சஜா
பார்வை : 102

மேலே