தோல்விக்கு ஓர் வெற்றி

தோற்பது அல்ல தோல்வி....
அதனைக் கண்டுத்
துவண்டுப் போவதே
தோல்வி!!!!
மற்றவர் முன்
தலைக்குனிந்து நிற்கும்
நிலைமை அல்ல தோல்வி....
அவர்கள் முன்
தலைநிமிர முடியாது என
எண்ணுவதே தோல்வி!!!!
அவமானம் என்பதல்ல தோல்வி....
அதனைச் சரிசெய்யாது,
நிதம்தினம் எண்ணிச்சாவதே
தோல்வி!!!!
உனக்கு ஒன்றுத் தெரியவில்லை
என்பதல்ல தோல்வி....
ஒன்றுமே தெரிந்துக் கொள்ளாமல்
இருப்பதே தோல்வி!!!!
நீ காணும் கவலை அல்ல தோல்வி....
அக்கவலையை
சலவை செய்யாது
இருப்பதே தோல்வி!!!!
கண்ணீரின் வலியல்ல தோல்வி....
அதனைத் துடைக்க வழிக் காணாமல்
இருப்பதே தோல்வி!!!!
இறுதியில் ஒன்று மட்டும்....
தோல்வியே வெற்றியின்
முதற்புள்ளி!!
இதனைப் புரிந்துக்
கொள்ளவில்லை எனில்,
அதுவே உன் வெற்றியின்
இறுதிப்புள்ளி!!!!