இலங்கையின் கலாவெவ குளத்தின் பெயர் வந்த கதை
அக்காலத்து தமிழ் நாட்டு மன்னர்களும் இலங்கைத்தீவின் மன்னர்களும் அவ்விரு நாடுகளின் பிரதான உணவான அரிசியும். வரகும் சோளமும் காய்கறிகளும் வளர விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். விவசாயத்துக்கு நீர் அவசியம் தேவை. அகவே வன்னியிலும், அனுராதபுர, பொலனருவ பகுதிகளில் பல குளங்கள் அமைத்தனர். வன்னியர்கள் என்றால் விவசாயிகள் என்பது அர்த்தம் . அனுராதபுரம் அடிக்கடி தமிழ் நாட்டின் சோழ பாண்டிய மன்னர்களால் ஆக்கிரமிப்பிக்கு உற்பட்டது என்பது நாம் அறிந்த வரலாறு. அவர்களை போரில் வென்ற பல சிங்கள மன்னர்களும் உண்டு அவர்களில் இலங்கையை கிமு 455 முதல் 422 வரை அனுராதபுரத்தில் இருந்து ஆண்ட தாதுசேனன் என்ற மன்னனும் ஒருவன். இவன் பல குளங்களை வெட்டுவித்தான். அதில் “கலாவெவ” என்ற 6,380 ஏக்கர் குளம் மிக பெரிய குளம். இது கெகிக்கிராவ என்ற ஊரில் இருந்து 6 மைல் தூரத்தில் உள்ளது இக் குளம் நிரம்பினால் அனுராதபுரத்தில் உள்ள திசாவேவ குளம் உற்பட பல குளங்களுக்கு நீர் யோதஎல எனும் 86.9 கிமீ நீளமான கால்வாய் வழியாக செல்கிறது. இந்த கால்வாயை ஆக்கிரமிப்பாளர்களைப் போரில் வென்றதின் நினைவாக “ஜெயகங்கா” என்றும் தாதுசேனன் அழைத்தான் இந்த வாய்க்காலை இக்காலத்தோடு ஒப்பிடும் பொது 2500 ஆண்டுகளுக்கு முன் இடம் பெற்ற மிக அதிசயப்பட வைக்கும் பொறியியல் சாதனை எனலாம். ஒரு கிமீ தூரத்துக்கு 95 மிமீ சரிவில் அமைக்கப்பட்டது இந்த குளத்தில் இருந்து உருவாகும் கலாஓயா என்ற நதி, புத்தளம் -அனுராதபுரம், புத்தளம்- மன்னார் ஆகிய பெரும் பாதைளை முத்தமிட்டு வில்பத்து வன பூங்காவின் ஊடாக 148 கி மீ தூரம் ஓடி, மன்னர் குடாவில் குதிரைமலைக்கு அருகில் சங்கமம் ஆகிறது
கலாவெவ நிர்மாணம் முடிந்த பின்னர், பாலாலுவெவ எனும் மற்றொரு குளத்தையும் கட்டியெழுப்பினான் தாதுசேனன். இரு குளங்களையும் ஒன்றாக இணைத்து இலங்கையின்,மிகப் பெரிய கலாவெவ குளமாக்கினான்:
ஸ்ரீலங்காவின் வரலாற்றில் மிகப்பெரிய ஒரு குளத்தை அமைக்க மிகவும் பொருத்தமான இடம் தேடி தாதுசேன மன்னன் மிகவும் ஆர்வத்துடன் இருந்தான். அது தொடர்பாக மரபு வழி வந்த நாட்டுப்புறக் கதை ஓன்று உண்டு.
தாதுசேன மன்னன் ஆட்சியில் வாழ்ந்த கடவவரான என்ற ஊர்வாசி தன் மனைவியின் பிரச்சனை தாங்க முடியாமல் குடும்பத்தை விட்டு வெளியேறி வனவாசம் சென்றான். காட்டில் சில ஆண்டுகளுக்குப் பிறகு அவன் காட்டு விலங்குகளோடு நன்கு பழக்கப்பட்டு, மான் கூட்டத்தோடு வாழ்ந்தான். ஒரு நாள் ஒரு வேட்டைக்காரன் திடீரென காட்டில் உள்ள விலங்குகளுடன் வாழும் இந்த விசித்திரமான மனிதனைக் கண்டான். வேட்டைக்காரன் அரண்மனைக்குச் சென்று . காட்டில் ஒரு பொக்கிஷத்தை காப்பாற்றுவதற்காக வனவிலங்குகளோடு ஒரு விசித்திரமான மனிதன் காட்டில் வசித்து வருவதாகத் தெரிகிறது என்று மன்னனுக்கு விபரம் சொன்னான் . அந்த மனிதனை பிடிக்கத் தம்முடைய படையை மன்னன் அனுப்பினான். கடவவரான பிடிபட்டு அரண்மனைக்கு கொண்டுவரப்பட்டான் . காட்டில் புதையல் எங்கே இருக்கிறது அதை காவல் செய்கிறாயா? என்று மன்னரன் அவனிடம் கேள்வி கேட்டபோது, கடவவரா என்ற அந்த மனிதன் தனது உண்மையான கதையை மன்னனுக்குச் சொல்லி , மனைவியோடு வாழப் பிடிக்காமல் நகரத்தை விட்டு வெளியேறி, காட்டில் வாழ்கிற காரணத்தைத் தெரிவித்தான். காட்டில் வசித்தபோது அவன் பார்த்த சுவாரஸ்யமான இடம் ஏதும் உண்ட? என மன்னன் கேட்டாரன். அதற்கு , கடவவரா "இல்லை மஹராஜா , நான் சுவாரஸ்யமான இடம் எதையும் புதையலையும் காணவில்லை ஆனால் காட்டில் ஒரு அழகிய நீரோட்டத்தை கண்டேன். அது முழுவதும் கலா என்று அழைக்கப்படும் தாவரச் செடி நிரம்பி இருந்தது . நீரோட்டத்தின் தண்ணீர் கூட தெரியவில்லை மன்னா “ . அந்த நீரோட்டம் பகுதியில் ஏதோ தண்ணீர் தேங்கப்படும சக்தி இருக்கிறது என மன்னன் கருதி அவ்விடத்தில் தான் திட்டம் போட்டு தோற்றுவித்த குளத்துக்கு கலா என்ற அழைக்கப்படும் தாவரச் செடி. நீரோட்டத்தின் மேல் வளர்ந்ததால் அக் குளத்துக்கு கலாவெவ எனப் பெயர் வைத்தான்’ வாவி என்ற
தமிழ் சொல் மருவி சிங்களத்தில் வெவ ஆயிற்று. 65 கிமீ சுற்றளவு உள்ளது கலாவெவ குளம் அக்குளத்தை பாதுகாக்க அதன் அருகே 43 அடி உயரமான் புத்தர் சிலையை அமைத்தான். குளத்துக்கு அணை கட்ட முன்பு ஒரு உயிரை பலி கொடுப்பது முன்பு இருந் வழக்கம்
தாதுசேனனின் மன்னனின் பல்லவ நாட்டு வைப்பாட்டிக்குப் பிறந்த கசியப்பா என்ற மகன் தந்தையை கொன்று சுவருக்குள் புதைத்தான் கொலை செய்ய முன் தந்தையிடம் கசியப்பா கேட்டான் “: எங்கே புதைத்து வைத்திருக்கிறாய் உன் செல்வத்தை? ;அதை எனக்குக் காட்டு” என்று. அதற்கு தாதுசேனன் கலவேவ குளத்தை மகனுக்குக் காட்டி” இது தான் என் செல்வம்” என்றான்
தந்தையைக் கொலை செய்த கசியப்பா. சிகிரியா குன்றின். மேல் தன் பாதுகாப்பு கருதி மாளிகை அமைத்து ஆட்சி புரிந்தான் சிகிரியா குன்றில் உள்ள அரை நிர்வாண மங்கையரின் சித்திரங்கள், வட இந்தியாவில் உள்ள அஜந்தா குகை சித்திரங்கள் போன்று வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபல்யமானது,
*****