இனிமை அவள்

தனியே அழுவாள்
தன்னால் சிரிப்பாள்
அவளுக்கான இவ்வுலகில் ஏதோ
அகதிபோல் நினைப்பாள்
நிறங்கள்அதிகம்விரும்புவாள்
கண்ணன் புல்லாங்குழலில் மயங்குவாள்
கனவில் வரச்சொல்வாள் இல்லை
கதகளி கண்ணால் ஆடிடுவாள்
அவளோடு தினம்
அணியாகி போனபின்
அழையாமலே மனம்
அவள் காண நினைக்கும்
சிலநேரம் தனிமை
சிறைவைத்துப் போனாலும்
அவள் இனிமையால்- இமை
விழியாமலே பறக்கும்