சிலிர்த்தது

குழந்தையின் கை பட்டபோதும்
உடல்தான் சிலிர்த்தது...
குளிர் மழை பட்டபோதும்
உடல்தான் சிலிர்த்தது...
பூக்கள் பட்டபோதும்
உடல்தான் சிலிர்த்தது...
பூங்காற்று் பட்டபோதும்
உடல்தான் சிலிர்த்தது...
பெண்ணே!
உன் பார்வை பட்டபோதுதான்
முதன் முதலாய்
' என் இதயம் ' சிலிர்த்தது....!