கடவுள் உண்டா இல்லையா
உண்டு
தீமை செய்யக்கூடாது
என்ற பயத்திலும்.
நம்பிக்கை கொண்ட
உழைப்பிலும்.
பொய் சொன்னால்
வரும் வினையிலும்.
எண்ணங்கள் ஈடேற
செய்யும் முயற்சிலும்.
கஷ்டத்தில் கை கொடுக்கும்
மனிதாபிமானத்திலும்.
தோல்வியிலும் துவளாத
மனத்திலும்.
மழலையின் சிரிப்பிலும்.
கடவுள் உண்டு.
இல்லை என்போர்
வாழ்வில்
மேற்கண்டதில்
ஒன்றேனும்
கண்டதில்லையா.