என்னவனே
கருவிழியில் நுழைந்த கள்வனே
என் கனவுகளின் காதலனே
துள்ளாத மனமும் துள்ளுதடா
உன்னால்
சொல்லாத கதைகள் சொல்லுதடா
பேதையின் பெண் மனம்
அறிவாயோ
என் காதலை உன்னுள்
உணர்வாயோ
காதலின் கரந்தனில் இணைவோமா
இன்ப காவியம் தான் படைப்போமா....