வானம் வரை நாம் செல்வோமா

அன்று நான் கண்ட அதே மீன்கள் இன்னும்
உன் விளிக் குளத்தில் நீந்திக் கொண்டிருக்கின்றன
கொடுங் காற்றில் அகப்பட்டுக் குலையும்
மரக் கிளையானது என்னிதயம்
மீண்டும் உன்னைக் கண்டதால்
உறக்கம் தொலைத்து நீளும் என் இரவுகள்
குளிர்க் காற்றிலும் என்னுடலில்
வெப்பம் பிழியும் உன் நினைவுகள்
மண்ணில் இருந்து வெளிப்பட்ட ஆலம் விதையாக
என்னுள் புதைந்த உன் காதல் தளிர்த்து நிற்குதே
என்னிடம் வா என் இளம் கிளியே
வசந்தம் வீசும் தென்றலை உடல் தழுவி
வான வீதியில் இளஞ் சிட்டுக்களாக
இமை பிரியாமல் துளி விலகாமல்
காலம் உள்ள வரை நாம் சிறகடிப்போம்

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (13-Nov-17, 4:11 pm)
பார்வை : 194

மேலே