செந்நீர் கலந்திடு
என் புனிதம்
பொலிவிழந்து போனது
என் தெளிவுமதி தினம்
தேய்ந்துகொண்டே போகுது
என் யமுனையாற்றுப் படுகை
வெள்ளம் கொண்டுசென்றது
என் தாஜ்மஹால் இன்று
தவித்து தனியே நிற்குது
என் ஜோடிப்புறா நீயே
எங்கே சென்றாய் தனியே
ஆழம்மில்லா கடலில்
கரையைத் தேடி அலைந்தேன்
கூட்டமில்லா தெருவில்
தொலைந்து நானும் போனேன்
ஏய் செங்காந்தமலரே
என் செந்நீர் கலந்திட வா
செந்நீர் கலந்து என்னிதையம்
தேடி அடைந்திட வா