அந்தப் பறவையே உலகிலே இல்லை
அன்னத்தை தூது விட நினைத்தேன்
அந்தப் பறவையே உலகிலே இல்லை !
மேகத்தை தூது விட நினைத்தேன்
அது பருவக் காற்றையே ஏய்த்துவிடுகிறது !
நிலவை தூது விட நினைத்தேன்
அது தேய்ந்து தேய்ந்து காணாமலே போய்விடுகிறது !
தென்றலைத் தூது விட நினைத்தேன்
பிகு மன்னன் தோட்டத்தில் உலாவப் போய்விடுகிறான் !
மின் அஞ்சல் குறுஞ் செய்தி ..நோ BORE !
ஆதலினால்
நேரே வந்து உன் முகவரியில் கதவைத் தட்டினேன் !
கதவு திறந்தது ....!!!!
ஐ லவ் யு ..என்றேன் !
WRONG அட்ரஸ் !!!
கோவத்தில் ஓங்கி மூடினாள் கதவை ஒரு மூதாட்டி !
அது ஏதோ ஒரு முகவரி !
என்ன செய்வேன் இறைவா ?
PLEASE COME DOWN AND HELP ME !
----கவின் சாரலன்