என்னவளின் கண்ணழகு

மையிட்ட உந்தன் மலர்விழிகள் ,
பேசும் விழிகள் இவை என்று
நான் எண்ணி முடிக்கும் முன்,
இங்கும் அங்கும், மேலும் கீழும்,
அசைந்தாடி நாட்டிய நயனங்களான
அதிசயம் கண்டு மலைத்துப்போனேன்,
மீண்டும் அந்த கண்களை பார்க்கையிலே
சிருங்காரம் கடைக்கண் ஓரத்தில் !
இப்படி கயலின், மானின்,வெண் புறாவின்
விழிகளின் லட்சணங்கள் அத்தனையும் ,
ஒரு மருங்காய் உன் விழிகளில் கண்டேனடி ,
அந்த மாய விழித்தந்த பார்வை
என் உடல்,பொருள்,ஆவி அத்தனையும்
ஒரே சுழற்றில் இருகக் கட்டி
உன் பார்வையின் அடிமையாய்
என்னை உன் காலடியில் வீழ்த்தியதே!
இனி என்னவளே நீ தானே கதி எனக்கு
நீ இன்றி நிந்தன் விழிகளின் பார்வை
என் மீது வீழாது எனக்கு வாழ்வேது ,
எந்தன் நயன தாரகையே !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Nov-17, 3:53 pm)
பார்வை : 346

மேலே