கல்லூரி காதல்

காலைச்சூரியன் என்ணை
தட்டி எழுப்பினான்.
இன்று கல்லூரியின்
கடைசிநாள்

பேருந்து நிருத்தத்தில்
காத்திருக்கிறேன்
என் தேவதைக்காக
அதோ!
அவள் வருவது தெரிகிறது
ஆம்!
நேற்றைய அம்மாவாசை இரவில்
நான் வானில் தேடிய
நிலவு - இன்று
தரையில் தவழ்ந்து
வருவது போல் வந்தாள்
இந்த தங்கதாமரை - இன்று
மஞ்சள்தாவனியில் மலர்திருந்தது

புடவைகட்டிய
பூவாய்!
கல்லூரியை வலம்வரும்
தேராய்!
கால் கொலுசு கச்சேரிபாட!
காதில் கம்மல் நடனமாட!
அந்த அழகுநதி
பேருந்து நிறுத்தத்தில்
வந்து நின்றது

காலை நேர ரோஜாவில்
ஒட்டிக்கொண்டிருக்கும்
பனித்துளிகள் போல - அவள்
முகத்தில் முத்துமுத்தாய்
வியர்வை துளிகள்!

அவளின் கருப்பு கூந்தலில்
கட்டணமின்றி குடியேறியிருந்தன
மல்லிகைகள்!

பூவால் இவளுக்கு அழகா?
இவளால் பூவுக்கு அழகா?
பட்டிமன்றமே வைக்கலாம்!

மீன் விழிகள் மின்சாரமாய்
தாக்க
அருகில்வந்தவள்
“ஹாய்” என்றாள்

உள்ளத்து காதலை
உதட்டால் சொல்ல
முயன்றேன்..............
ப்பூபூ............ம்ம்ம்ம்ம்

பல்லவன் வந்து
பாதியில் குறுக்கிட்டான்
இருவரும் ஏறினோம்

“பல்லாக்கில் சுமக்க
நானிருக்க - உனக்கு
பல்லவன் எதுக்கடி?” -
இத்தோடு என்
கவிதை புத்தகத்தின்
இறுதி பக்கமும்
நிரம்பியது

கல்லூரி தேர்வுமுடிந்து
ஒவ்வொருவராய்
வெளியேவர - நானும்
வந்தேன் - அவளும்
வந்தாள்..
மீண்டும் “ஹாய் - ஹாய்”

எல்லோரிடமும் வாங்கிவிட்டேன்
நீங்க..............
என்றவாறு இருவரின்
காலப்பதிவேடும்
கைமாறியது

பார்வை சிறையில்
பதுங்கிக் கிடந்தயேன்
காதலை - இந்த
காலப்பதிவேட்டில்
கச்சிதமாய் செதுக்கினேன்
மீண்டும்
காலப்பதிவேடுகள்
கைமாறின..

இறுதியில் தனிமையில்
அதை திறந்து
பாவை பதிந்துவைத்த
பக்கத்தை தேடினேன்

பத்துநாள்
பசித்திருந்தவன்
கையில் கிடைத்த
உணவு பொட்டலம்
போல் பிரித்தேன் !

மண்ணில் கலந்த
உணவுக்காக மண்ணை
கிளரும் கோழியின்
வேகம் எனக்கு................

தேர்வு முடிவில் - தன்
எண்ணை தேடும்
மாணவனின்
பயம் எனக்கு................

இறுதி பந்தில்
ஆறு ரன் தேவை
முடிவுக்காக
காத்திருக்கும் ரசிகனின்
ஆர்வம் எனக்கு................

கிடைத்துவிட்டது............
பாவையின் பதிவு
கிடைத்துவிட்டது............

மூன்று வருட ஏக்கத்தை
மூன்று வார்த்தையாய்
முருக்கி கட்டியிருந்தாள்......
ஆம்!
“ஐலவ்யூயூயூயூயூயூ..........”

பார்த்தேன்..
படித்தேன்....
பறந்தேன்......
உலகையே மறந்தேன்..........

உயரே பறந்த பந்து
உள்ளங்கையில்
விழுந்தது போல............


மழைகண்ட
விவசாயி போல்........
மடை திறந்த
வெள்ளம் போல்.........

எத்தனை மகிழ்ச்சி!?
அளவிட கோலும் இல்லை
அனுபவித்த ஆளும் இல்லை

எம்பிக் குதித்தேன்
தலையில் பலத்த அடி
திடுக்கிட்டு விழித்தேன்
“இன்னும் என்ன தூக்கம்?
காலேஜ்க்கு நேரமாச்சு
எழுந்திரு.. .. ..”
சப்தமிட்டு கொண்டிருந்தார்
என்தாய்!

❤🌹❤🌹❤🌹❤🌹❤

கவிப் புயல்
சஜா. வவுனியா

எழுதியவர் : சஜா (15-Nov-17, 3:53 am)
சேர்த்தது : சஜா
Tanglish : kalluuri kaadhal
பார்வை : 876

மேலே