வெறும் பிதற்றல்கள்

தீம் திங்கள்
மெளனித்திருக்கையில்
என் தமிழ் ஊமையாகிறது...!
துடித்திடும் வலது இமையை
தடுக்கிறாயோ?
இமை பிரிகையில்
ஏதேனும்
ஓர் ஓளியில்
என் உருவம் வளிகையில்
ஒருதலை ராகமாய்கூடவா
நானில்லை மனதில்...
பொய்கை நகைப்புகள்
புது உணர்வுகளை
பதித்து ஓடிடும்....
ஆழி அடைந்தபின்
துளியை எங்கே நான்
தேடுவது?
ஒவ்வொரு அலைக்கும்
காத்திருப்பினும்...
எந்த வலை
நீர் கொள்ளும்...?

எழுதியவர் : சுரேஷ் குமார் (16-Nov-17, 1:54 am)
பார்வை : 66

மேலே