வீட்டில் விட்டுக் கொடு
விட்டுக் கொடுப்பதில்தான் சேர்ந்து வாழுவதின்
வெற்றி இருக்குதடா! - மனம்
கட்டுப் படுவதில்தான் காதல் இனிக்குமடா!
கற்பும் நிலைக்குமடா!
தொட்டுக் கலந்தபின்பு துணையின் குறைநினைத்தால்
தூக்கம் தொலையுமடா! - இதை
மட்டும் மனதில்வைத்து வாழ்ந்து வருபவர்க்கு
மகிழ்ச்சி நிலைக்குமடா!