வெல்ல முடியாத உன் இதயம்

நனைய மறந்த மழைத்துளி ..
கோர்க்க முடியாத பனித்துளி ..
சேர்க்க முடியாத மழலை சிரிப்பு .
பார்க்க முடியாத மொட்டவிழும் பொழுது..
கைக்குள் அகப்படாத தென்றல் காற்று ..

எல்லாவற்றிற்கும் மேலாக
வெல்ல முடியாத உன் இதயம் ..
எப்போதும் வெற்றிடமாய் நான்…

எழுதியவர் : சஜா (16-Nov-17, 11:23 am)
சேர்த்தது : சஜா
பார்வை : 347

மேலே