அன்புள்ள மான்விழியே -- காதல் கவிதை

அன்புள்ள மான்விழியே !!

அன்புள்ள மான்விழியே ! அருகே வாராயோ !
காதலால் அழைக்கின்றேன் ! கனியே அறியாயோ !
மோதலும் வேண்டாமடி ! மோகமுள் நீதானடி !
மடலினைப் பாராயோ ! மறுமொழி தாராயோ !

மலரே உனையே மணமுடை மலராய்ப்
பலநாள் உணர்வாய்ப் பசுமை நெஞ்சில்
இனிதாய் எழுதிட இயற்கை என்னுள்
கனிநிகர் அழகுக் கன்னி நீயும்
சிலையாய் நின்றுமே சிந்தையைச் சிதைத்தாய் .!!!

என்றும் உன் நினைவினில் யானும்
உந்தன் பெயரை உள்ளம் எழுதி
இதயக் கூட்டில் இருத்தி வைத்தேனடி !!

கதியே நீயெனக் காதல் மலர
விதியை எண்ணி வியக்கும் வேளைப்
பதியாய் எனையும் பதிப்பாய் மனத்தில் .
காதல் நோய்க்குக் கன்னி நீதான்
சாதல் இல்லாச் சாகா மருந்து .!!
உன் நாணம் நான் . இப்படிக்கு ...!!

சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (16-Nov-17, 8:08 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 192

மேலே