ரிலாக்ஸ்

மனதை இலேசாக்கும்
மாயம் ஒன்றுசொல்வேன் !
மாடியில் படுத்துக்கொள்;
வானில் மின்னுகின்ற
எண்ணற்ற நட்சத்திரம்
கண்ணுற்று மகிழ்ச்சிகொள் !
தென்றலும் தாலாட்டும்!
தேனிலா பாலூட்டும்!
வந்தது தெரியாமல் - மன
அழுத்தமும் மாறிவிடும் !

எழுதியவர் : கௌடில்யன் (16-Nov-17, 8:19 pm)
சேர்த்தது : கௌடில்யன்
Tanglish : relax
பார்வை : 86

மேலே