உன் நன்மைக்காகவே என் காதலை இழக்கிறேன்
உன்மீது காதல் என்ற போது
முகம் மாறிப்போனது
பல கேள்விகள் மனதில் எழுந்தது
இருந்தும் மறுத்து விட்டேன்
உன் காதலை நான் ஏற்க
எப்படி என் நட்பை நான் தொலைக்க
தொலைப்பது சுலபம் கிடைப்பது கடினம்
நட்பில் காதல் வேண்டாமே
என்று உன் நன்மைக்காக
விட்டு விடுகிறேன் உன் நட்பை அல்ல
என் நட்பில் முளைத்த காதலை