அம்முக் கள்ளன்

இரகசியமானவனே என்

இரகசிய இடங்களை இரட்சிக்கும்

இரகசியமானவனே......

அவசியமானவனே

எனக்குஅலாதியானஅவஸ்தைகள்

தந்திடும் அவசியமானவனே.....

சத்தமின்றி சாகிறேனடா நின்

சலனமற்ற பார் வையால் ....

நித்தம் நித்தம் வேகிறேனடா நின்

மொழிகள் பேசும் கோர்வையால்...

செல்லசண்டையிட்டு

சேர்வதற்குள்

மரணித்து மரணித்து

ஜனிக்கிறேனே

மனமில்லையா உனக்கு???.......

நீ முதலில் எய் துவதா

நான் முதலில் எயதுவதா

வார்த்தை அம்பை எனூம்

வாதத்தில் வாய்தா வாங்கி

வாய்தா வாங்கி பின்னுக்குத்

தள்ளுகிறாயே என் பிரியத்தை

இன் னும் பிடிவாதம் எதற் கு???

போட்டிப்போட்டுக்கொண்டு

எனை பொருட்படுத் தாமல்

போகும் உன் திமிரால் தானே

என் காதலின் தீவிரத்தை

திருகிவிடுகிறாய்.....

கண் டும் காணாதுபோல் போகும்

உன் கள்ள்த்தனத்தால் தானே

என் உள்ளத்தின் உயிரை

வளர்கிறாய்...

அமைதி போராட்டம் நடத்தி

அகிம்சைக் கொலைகளை

புரிகிறாய் .....

தண்டனை மட் டும் எனக் கு.......

உயிரற்றுப் போகிறதடா நீ

பரிகாசம் செய்யாத என் நொடிகள்....

திறனற்று கிடக்கிறதடா நின்

கேலிபாஷை கேட்கா என்

செவிகள்.......

இன்னும் என்ன வீம்பு உனக்கு??

இவ்விரகம் இன்னும் வேண்டும்

எனக்கு......

உன் பொய் கோபங்கள் என் மீது

உனக்கே உரித்தான உரிமை

பத்திரங்கள் அன்றோ!!!

நடத்து......

நடத்து......

என் நாடி அடங்கும் வரை

நடத்து......

அமைதியாய் களவாடுகிறாயே

என் பொழுதுகளை உன்

நினைவுகளால்......

ஆமாம் ஆமாம்

"அம்மூக்கள்ளன்"

அல்லவா நீ !!!

எழுதியவர் : விஜய காமராஜ் (18-Nov-17, 8:58 pm)
சேர்த்தது : விமுகா
பார்வை : 160

மேலே