தமிழே போதும் உன் கவிதை

பொய் பேசும் தமிழே
போதும் உன் கவிதை
அவள் புன்னகை மௌன அழகின் முன்
வாத்தைகள் அர்த்தமற்றவை !

கற்பனை சொல்லும் தமிழே
கயல் என்றும் நீல நைல் என்றும்
கதை அளக்காதே
அவள் கண்கள் காதல் விரிய
பிரமன் செய்த செயல் !

யாழென்றும் குழலென்றும் கூறவோ
என்று கேட்கிறாயா தமிழே
அவள் வாய் திறந்து பேசட்டும்
அப்பொழுது கூப்பிடுகிறேன் உன்னை !

எழுதியவர் : கவின் சாரலன் (22-Nov-17, 10:05 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 468

மேலே